விண்வெளி நாயகன் நான் இல்ல! அவர்தான்.. கமல் சொன்ன அந்த பிரபலம்

by Rohini |   ( Updated:2025-05-02 00:55:50  )
kamal (2)
X

kamal (2)

Kamal: தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். சினிமாவில் இவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். எல்லா துறைகளிலும் இவருடைய பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு உலகநாயகனாக வளர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் சினிமா மீது அவருக்கு இருக்கும் மோகம்.

ஆனால் இந்த உலக நாயகன் பட்டம் தனக்கு வேண்டாம் என சமீபத்தில் தான் தெரிவித்திருந்தார். தன்னை கமல்ஹாசன் என்று அழைக்கவும் என்றும் பணிவன்புடன் கேட்டுக்கொண்டார் கமல். இத்தனை சாதனைகளையும் பெருமைகளையும் உடைய கமல் தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை வேண்டாம் என்று சொன்னதற்கான காரணம் என்ன என்பது தெரியாது.

ஆனால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அதைவிட அதிக அந்தஸ்துடைய ஒரு பட்டத்தை கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். அதுதான் விண்வெளி நாயகன். தக் லைஃப் படத்தில் அவருக்கு விண்வெளி நாயகன் என்று டைட்டில் கார்டில் போடப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல விண்வெளி நாயகன் பெயரை வைத்து அந்த படத்தில் ஒரு பாடலே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் பிரபல நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான கிரேசி மோகன் 25 புத்தகங்கள் வெளியிட்டு விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கமலும் கலந்து கொண்டார். அப்போது கமல் மேடையில் பேசுகையில் அருகில் கே எஸ் ரவிக்குமார் இருந்தார். அவரை பார்த்து கமல் ‘உங்கள் படத்தில் எனக்கு உலக நாயகன் என்ற பட்டத்தை கொடுத்தீர்கள் .அப்படி கொடுத்து விட்டீர்கள் என நினைத்து நான் உங்களுடன் படங்கள் பண்ணாமல் இருந்தால் நல்லாவா இருக்கும்?’ என கேட்க அதற்கு கே எஸ் ரவிக்குமார் உலகத்தோடு ஒட்டி இருப்பதினால் தான் உங்களுக்கு உலகநாயகன் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அதற்கு கமல் என்ன வேணாலும் சொல்லிக்கோங்க எனக் கூறிவிட்டு விண்வெளி நாயகன் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே விண்வெளி நாயகன் கிரேசி மோகன் தான். ஏனெனில் அவர் தான் என்னை விட்டுவிட்டு முதலில் சென்று விட்டார். அதனால் தான் அவர் விண்வெளி நாயகன். அவரை சந்திக்க வேண்டும் என்றால் நாமும் அங்கு போக வேண்டும் .அவருடைய நாடகங்களை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் அங்கு வந்து தான் பார்க்க வேண்டும் என மிகவும் காமெடியாக கூறியிருந்தார் கமல். இந்த உலகத்தை விட்டு கிரேசி மோகன் சென்றதை குறிப்பிட்டு கமல் இவ்வாறு அந்த மேடையில் பேசியிருந்தார் .

Next Story