‘மருதநாயகம்’ படத்தை வேறொரு நடிகரை வைத்து மிரட்டப்போகும் கமல்!.. சரியான தேர்வுதான்..
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 60 ஆண்டு கால சினிமா பயணத்தில் இன்னும் ஏதாவது சினிமாவில் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற முனைப்புடன் தான் கமல் செயல்பட்டு வருகிறார். மேலும் சினிமாவின் தாக்கம் அவரிடையே மிகவும் ஊன்றி இருக்கின்றது என்றே கூறலாம்.
அவரின் நீண்ட நாள் கனவாக இருப்பது ‘மருதநாயகம்’ திரைப்படம் தான். இந்தப் படம்
அப்பவே 80 கோடி பட்ஜெட்டில் தயாராக இருந்தது. அதற்கான வேலைகளை எழுத்தாளர் சுஜாதாவுடன் 1991 ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பித்தார் கமல்.
ஸ்கிரிப்ட் வேலைகள் எல்லாம் முடிந்து படத்தை எடுக்க 1997 ஆம் ஆண்டும் படக்குழு தயாரானது. ஆனால் நிதி நிலை காரணமாக படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. படத்திற்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்தரன், இசை இளையராஜா என எல்லாம் தயாராக இருந்தது.
ஒரு வரலாற்றுக் கதையை பின்னனியாக வைத்து படம் திட்டமிடப்பட்டிருந்தது. படத்திற்கான பூஜைகளும் சென்னை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்திருந்த மருதநாயகம் திரைப்படம் இன்று வரை ஒரு கனவாகவே இருந்து வருகிறது.
ஆனால் கமல் இன்னும் எப்படியாவது படத்தை எடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் தான் இருக்கிறார். ஆனால் அவரால் அந்த மாதிரி நடிக்க முடியாது. ஆகவே வேறொரு நடிகரை வைத்து படத்தை எடுக்கலாமா என்றும் யோசித்து வருவதாக தெரிகிறது.
கமலின் நெருங்கிய நண்பரான சந்தான பாரதியிடம் நிரூபர் ஒருவர் மருதநாயகம் படம் விக்ரமை வைத்து எடுக்கப்பட உள்ளதாக சில தகவல்கள் வருகிறதே உண்மையா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சந்தான பாரதி ‘ ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், ஆனால் இன்னும் அதைப் பற்றி கேட்கவில்லை’ என்று கூறினார். கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய ஒரே நடிகர் விக்ரம் தான். ஆகவே விக்ரம் கூட சரியான தேர்வு தான் என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : உங்களுக்கு அவ்வளவுதான் சொல்லிட்டேன்.- ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்த நயன்தாரா..!