கமல் பார்த்து வியந்த சிவாஜியின் நடனம்!.. மெய்சிலிர்க்க வைத்த நடிகர்திலகம்!..

kamal sivaji
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் சிவாஜி என்றால் இந்த தலைமுறையினருக்கு ஒரு வியப்பூட்டும் நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இருவருமே சினிமாவிற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். சினிமா தான் எல்லாமே என்று இருந்தவர்கள்.
அதில் கமல் ஒரு படி மேலாக தொழில்நுட்ப ரீதியாக புதுப்புது அணுகுமுறைகளை தமிழ் சினிமாவிற்காக பல அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அந்த அளவுக்கு முழு ஈடுபாட்டுடன் தன்னை இணைத்துக் கொண்டார் கமல். இவர்களின் நடிப்பை பல படங்களில் கண்டு வியப்படைந்திருந்தாலும் தேவர் மகனில் இருவரின் நடிப்புமே பெருமளவு பாராட்டப்பெற்றது.

kamal1 sivaji
கமலை பார்த்து சிவாஜியும் சிவாஜியை பார்த்து கமலும் மாறி மாறி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சிவாஜியின் நடனத்தை பார்த்து அதை சிவாஜியிடமே நேராக சொல்லி மகிழ்ந்திருக்கிறார் கமல். சிவாஜி நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படம். சிவாஜி முதன் முதலில் இருவேரு கதாபாத்திரங்களில் நடித்த படமாகும்.
அந்த படத்தில் வரும் ஒரு பாடலில் சிவாஜியின் நடனம் ரசிக்கும் படியாக இருக்கும் . அந்தப் பாடலை பற்றியும் நடனத்தை பற்றியும் சிவாஜியிடமே கமல் ஒரு முறை கேட்டார். நாங்கள் இப்பொழுது போடுகிற ஸ்டெப்ஸ்களை நீங்கள் அப்பொழுதே போட்டு விட்டீர்கள்,
இதையும் படிங்க : பறந்து சென்று உதவிய எம்.ஜி.ஆர்.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன தேங்காய் சீனிவாசன்.. நடந்தது இதுதான்!…
மேலும் அந்த கைதட்டும் போது இருக்கும் ஸ்டைல் இருக்கே என்று மிகவும் ஆச்சரியப்பட்டு கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி அதில் நான் என்ன பண்ணேன், எல்லாம் அந்த படத்தின் நடன இயக்குனருக்கு இந்த பெருமை சேரும் என்று சொன்னதும் மீண்டும் கமல் வியப்படைந்தாராம். இதுவரை வேறெந்த படத்திலயும் சிவாஜி அந்த மாதிரி நடனத்தை வெளிப்படுத்தியிருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

sivaji
பொதுவாக எல்லாரும் நான் அந்த காட்சியை மிகவும் கஷ்டப்பட்டு பண்ணேன் என்று சொல்லுவார்கள், ஆனால் நீங்களோ பெருமை எல்லாம் நடன இயக்குனருக்கு தான் என்று சொல்வது மீண்டும் ஆச்சரியமாக இருக்கிறது என்று சிவாஜியிடமே கூறியிருக்கிறார் கமல். அவர்கள் இருவரும் ஒரு சமயம் உரையாடிய ஒரு வீடியோ தான் இப்பொழுது வைரலாகி வருகின்றது.