Connect with us
banner

உங்களுக்கெல்லாம் நான் ஹெட்மாஸ்டர்டா..! விஜய் பத்தி கேட்ட கேள்விக்கு அவர்கள் பாணியிலயே திருப்பி அடிச்ச கமல்…

kamal_main_cine

Cinema News

உங்களுக்கெல்லாம் நான் ஹெட்மாஸ்டர்டா..! விஜய் பத்தி கேட்ட கேள்விக்கு அவர்கள் பாணியிலயே திருப்பி அடிச்ச கமல்…

வரும் ஜூன் 3 ஆம் தேதி கமல் நடிப்பில் வெளியாக காத்து கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ராஜ்கமல் புரொடக்‌ஷன் தான் படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

kamal1_cine

படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி மக்களை பிரமிக்கவைத்துள்ளது. மேலும் விக்ரம் படத்தின் முதல் இரண்டு சிங்கிள்களும் வெளியாகி பட்டையை கிளப்பியது.

kamal2_cine

அரசியலில் தீவிரம் காட்டி வந்த கமல் அதுக்கும் அப்பாற்பட்டு இப்பொழுது படத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியாத கமல் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அதற்காக முன்னனி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயம் ரவி தாமாக முன்வந்து கமல் புரடக்‌ஷனில் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

kamal3_cine

இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவிற்கு தன்னுடைய விக்ரம் படத்தின் புரோமோஷனுக்காக சென்ற கமலிடம் நிரூபர்கள் “ தளபதியுடன் நடிப்பீர்களா? “ என்று கேட்டனர். அதற்கு கமல் எப்படி பட்டவர் என எல்லாருக்கும் தெரியும். கொடுத்ததை அப்படியே திருப்பி கொடுக்கும் கொடை வள்ளல். நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர்கள் பாணியிலயே “ தளபதி ஐய்யா கால்ஷீட் கொடுத்தால் நடிக்க தயார்” என நய்யாண்டியுடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top