Connect with us

ஐயா அவளோ நாள் தாங்காது.! கமலை கெஞ்சும் ரசிகர்கள்.! சீக்கிரம் அந்த விடியோவை ரிலீஸ் பண்ணுங்க..,

Cinema News

ஐயா அவளோ நாள் தாங்காது.! கமலை கெஞ்சும் ரசிகர்கள்.! சீக்கிரம் அந்த விடியோவை ரிலீஸ் பண்ணுங்க..,

அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனால், தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்களின் ஒரே நம்பிக்கை விக்ரம் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார். லோகேஷ் , கமலின் தீவிர ரசிகர். ஆதலால், இந்த திரைப்படம் மீது ரசிகர்கள் அதிகமான நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால், அதற்குள் டீசர், பாடல், ட்ரைலர் என ஏதேனும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, தற்போது அந்த எதிர்பார்ப்பில் வெடிகுண்டை வீசியிருக்கிறது படக்குழு.

இதையும் படியுங்களேன் – விஜயின் மனசு அஜித்திற்கு வராதா.?! ஏக்கத்தில் ‘அந்த’ தொழிலாளர்கள்.!

ஆம் தற்போது ராஜ் கமல் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விக்ரம் படத்தின் ட்ரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும்.  மே 18ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள். இன்னும் பல நாட்கள் இருக்கிறதே அவளோ நாள் தாங்காது விரைவில் அடுத்து டீசராவது வெளியிடுங்கள் என ராஜ்கமல் டிவிட்டர் பக்கத்தில் கெஞ்சி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top