Connect with us
Kamal Mohan

Cinema History

கமலுடன் 23 தடவை மோதிய மோகனின் படங்கள்… ஜெயிச்சது யாருன்னு தெரியுமா?

உலகநாயகன் கமல் படங்களுடன் மைக் மோகனின் படங்கள் 23 முறை நேரடியாக மோதியுள்ளன. இருவரில் வெற்றி யாருக்கு என்று பார்க்கலாமா…

 வறுமையின்நிறம் சிவப்பு – மூடுபனி

1980 நவம்பர் 6ம் தேதி, தீபாவளிக்கு கமல் நடித்த வறுமையின்நிறம் சிவப்பு வெளியானது. அதே நேரம் மோகனுக்கு மூடுபனி வெளியானது. கமல், ஸ்ரீதேவி நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது. மோகன், பிரதாப் போத்தன், ஷோபா நடித்த மூடுபனி படம் 200 நாள்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இதுல மோகன் தான் வின்னர்.

மரியா மை டார்லிங் – நெஞ்சத்தைக் கிள்ளாதே

1980 டிசம்பர் மாதம் கமலுக்கு மரியா மை டார்லிங் படம் ரிலீஸாகுது. மோகனுக்கு நெஞ்த்தைக் கிள்ளாதே ரிலீஸ். மோகன், பிரதாப் போத்தன், சுகன்யா நடித்த நெஞ்சத்தைக் கிள்ளாதே டிசம்பர் 12ல் ரிலீஸ். இந்தப் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. அடுத்த ஒரு வாரத்துக்குள் கமல், ஸ்ரீபிரியா நடித்த மரியா மை டார்லிங் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ரிலீஸ். எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லை. இதுலயும் மோகன் தான் வின்னர்.

1981 டிசம்பர்ல கமலுக்கு எல்லாம் இன்பமயமும், மோகனுக்கு கிளிஞ்சல்களும் ரிலீஸ். கமலோட படம் 100 நாள்கள் ஓடியது. அடுத்த 20 நாள்களில் கிளிஞ்சல்கள் ரிலீஸ். இதுவும் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. இதுலயும் மோகன் தான் வின்னர்.

மூன்றாம் பிறை – பயணங்கள் முடிவதில்லை

1982 பிப்ரவரியில் கமலுக்கு மூன்றாம் பிறை படமும், மோகனுக்கு பயணங்கள் முடிவதில்லை படமும் ரிலீஸ். மூன்றாம்பிறை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு வருடம் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்த ஒரு வாரத்தில் மோகனின் பயணங்கள் முடிவதில்லை ரிலீஸ். 500 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இதுலயும் மோகன் தான் வின்னர்.

1982 ஏப்ரல்ல மோகனுக்கு காற்றுக்கென்ன வேலி படமும், கமலுக்கு சிம்லா ஸ்பெஷலும் ரிலீஸ். இந்த இருபடங்களுமே 100 நாள்கள் ஓடி டிரா செய்துள்ளது.

1982 ஆகஸ்டு மாதம் கமலுக்கு சகலகலா வல்லவன் படமும், மோகனுக்கு தீராத விளையாட்டு பிள்ளை படமும் ரிலீஸ். இதுல கமல் படம் வெள்ளி விழா. மோகன் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மோதலில் கமல் தான் வின்னர்.

ராணித் தேனீ – கோபுரங்கள் சாய்வதில்லை

1982 அக்டோபரில் மோகனுக்கு கோபுரங்கள் சாய்வதில்லை, அர்ச்சனை பூக்கள் என இரு படங்கள் ரிலீஸ். கமலுக்கு ராணித் தேனீ ரிலீஸ். கமல் படம் பிளாப். மோகனின் கோபுரங்கள் சாய்வதில்லை 200 நாள்கள் ஓடியது. அர்ச்சனை பூக்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.1982 நவம்பரில் மோகனுக்கு சின்னஞ்சிறுசுகள் படமும், கமலுக்கு பகடை பனிரெண்டு படமும் ரிலீஸ். இதுல மோகன் படம் தான் வின்னர்.

சட்டம் – இளமைக்காலங்கள்

1983 ஏப்ரலில் கமலுக்கு சட்டம் படமும், மோகனுக்கு அந்த சில நாட்கள் படமும் ரிலீஸ். இரு படங்களும் வெற்றி தான். 1983 ஆகஸ்ட்டில் மோகனுக்கு இளமைக்காலங்கள் படமும், கமலுக்கு பொய்க்கால் குதிரை படமும் ரிலீஸ். 200 நாள்களுக்கு மேல் ஓடிய மோகன் படம் தான் வின்னர். 1983 தீபாவளிக்கு கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே படமும், மோகனுக்கு மனைவி சொல்லே மந்திரம் படமும் ரிலீஸ். கமல், ராதா நடித்த தூங்காதே தம்பி தூங்காதே 275 நாள்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. மோகன் படம் வெள்ளிவிழா. இதுல கமல் தான் வின்னர்.

எனக்குள் ஒருவன் – ஓசை

1984 தீபாவளி அன்று மோகனுக்கு ஓசை, ஓ மானே மானே, உன்னை நான் சந்தித்தேன் என 3 படங்கள் ரிலீஸ். கமலுக்கு எனக்குள் ஒருவன் ரிலீஸ். மோகனின் முதல் இரு படங்கள் செம ஹிட். ஓசை வெள்ளி விழா. உன்னை நான் சந்தித்தேன் படமும் வெள்ளி விழா. கமல் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. மோகனே வின்னர்.

காக்கி சட்டை – உதயகீதம்

KSUG

KSUG

1985 தமிழ்புத்தாண்டு அன்று கமலுக்கு காக்கி சட்டை படமும், மோகனுக்கு உதயகீதம், தெய்வப்பிறவி, பிள்ளை நிலா என 3 படங்களும் ரிலீஸ். கமலின் காக்கி சட்டை படம் 150 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. ஆனால் உதயகீதம், பிள்ளை நிலா படங்கள் 200 நாள்கள் ஓடி சாதனை படைத்தன. தெய்வப்பிறவியும் சூப்பர்ஹிட். இதுலயும் மோகனே வின்னர்.

1985 மே மாதம் கமலுக்கு அந்த ஒரு நிமிடம் படமும், மோகனுக்கு தென்றலே என்னைத் தொடு படமும் ரிலீஸ். மோகன் படம் 250 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. கமல் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

1985 ஜூலையில் கமலுக்கு உயர்ந்த உள்ளம் படமும், மோகனுக்கு குங்குமச்சிமிழ் படமும் ரிலீஸ். கமல் படம் சுமார். மோகன் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. 1985 செப்டம்பரில் மோகனுக்கு இதய கோயில் படமும், கமலுக்கு மங்கம்மா சபதம் படமும் ரிலீஸ். மோகன் படம் 200 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. கமல் படம் சுமாராக ஓடியது.

காதல் பரிசு – ரெட்டைவால் குருவி

1987 ஜனவரியில் கமலுக்கு காதல் பரிசு படமும், மோகனுக்கு ரெட்டைவால் குருவி படமும் ரிலீஸ். கமல் படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. மோகன் படம் வெள்ளிவிழா கண்டது. 1987 ஜூலையில் கமலின் பேர் சொல்லும் பிள்ளை படமும், மோகனுக்கு நினைக்க தெரிந்த மனமே ரிலீஸ். இதுல இருவருக்கும் வெற்றி.

நாயகன் – தீர்த்த கரையினிலே

1987 செப்டம்பரில் மோகனுக்கு தீர்த்த கரையினிலே படமும், கமலுக்கு நாயகன் படமும் ரிலீஸ். மோகனுக்கு இந்தப் படமும் வெள்ளிவிழா தான். கமலின் நாயகன் படம் 214 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. 1988 ஜனவரியில் கமலுக்கு சத்யா படமும், மோகனுக்கு குங்குமக்கோடு படமும் ரிலீஸ். கமல் படம் 150 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. மோகன் படமும் வெற்றி தான். ஆனால் சத்யா தான் மிகப்பெரிய வெற்றி.

1988 ஆகஸ்டில் மோகனுக்கு மாப்பிள்ளை சார் படமும், கமலுக்கு உன்னால் முடியும் தம்பி, சூரசம்ஹாரம் படமும் ரிலீஸ். சூரசம்ஹாரம் 100 நாள் ஓடியது. உன்னால் முடியும் தம்பி சுமாராக ஓடியது. இதுல மோகனின் படம் தான் வெற்றி.

வெற்றிவிழா – பாசமழை

1989 தீபாவளிக்கு கமலின் வெற்றிவிழா படமும், மோகனின் பாசமழை படமும் ரிலீஸ். கமலின் படம் வெள்ளிவிழா. மோகன் படமும் வெற்றி. ஆனால் கமல் தான் வின்னர். 2008ல் கமலுக்கு தசாவதாரம் படமும், மோகனுக்கு சுட்ட பழம் படமும் ரிலீஸ். இதுல கமல் படம் தான் வின்னர்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top