Connect with us
kamal vijayakanth

Cinema History

22 முறை மோதிய விஜயகாந்த் – கமல்ஹாசன் படங்கள் : அதிக ஹிட் கொடுத்தது யார் தெரியுமா?…

Kamalhaasan vs Vijayakanth: ரஜினி, கமல் பீக்கில் இருந்தபோது சினிமாவில் நுழைந்தவர் விஜயகாந்த். ஒருகட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கு போட்டி நடிகராகவே மாறி டஃப் கொடுத்தார். விஜயகாந்தோடு நடிக்க மறுத்த ரஜினி அவரின் வளர்ச்சியை பார்த்து ஆச்சர்யப்பட்ட காலங்களும் உண்டு. 80,90களில் பல சூப்பர் ஹிட் படங்களை விஜயகாந்த் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், ஒரே நாளில் கமல் படங்களுக்கு போட்டியாக வெளியான விஜயகாந்த் படங்கள் பற்றியும், அதில் அதிக வெற்றியை பெற்றது யார் என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

கமல் – விஜயகாந்த் போட்டி என்பது 1981ம் வருடமே துவங்கிவிட்டது. அந்த வருடம் கமலின் சங்கர் லால் படமும், விஜயகாந்தின் சிவப்பு மல்லி படமும் வெளியானது. இதில் கமல் படம் அதிக வசூலை பெற்றது. மூன்றாம் பிறையும், விஜயகாந்தின் பார்வையின் மறுபக்கமும் வெளியாகி மூன்றாம் பிறை அதிக வசூலை பெற்றது. எனக்குள் ஒருவனோடு போட்டி போட வைதேகி காத்திருந்தாள் அதிக வசூலை பெற்றது.

இதையும் படிங்க: விஜயகாந்த்தின் அந்த படத்தின் ஆடியோவுக்கே தெருவை விலைக்கு வாங்கிரலாம்! அந்தளவு லாபம் சேர்த்த படம்

ஒரு கதையின் டைரி-யோடு மோதிய அலையின் ஓசை தோல்வி அடைந்தது. காக்கி சட்டையோடு மோதிய ராம் ஸ்ரீராமன் தோல்வி அடைந்தது. ஜப்பானில் கல்யாணராமனோடு மோதிய ஏமாறாதே ஏமாற்றதே படம் பெரிய வெற்றியை பெற்றது. புன்னகை மன்னனோடு மோதிய விஜயகாந்தின் தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் பெரிய வெற்றியை பெறவில்லை. காதல் பரிசுக்கு போட்டியாக வெளிவந்த சிறைப்பறவை பெரிய வெற்றியை பெற்றது. நாயகன், உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு ஒன்றாக வெளியாகி அனைத்து படங்களும் வெற்றி பெற்றது.

உன்னால் முடியும் தம்பி படத்தோடு விஜயகாந்தின் தம்பி தங்ககம்பி மற்றும் நல்லவன் என இரண்டு படங்கள் மோதியதில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். வெற்றி விழா படத்தோடு வெளியான தர்மம் வெல்லும் மற்றும் ராஜநடை ஆகிய படங்கள் குறைவான வசூலை பெற்றது. மைக்கேல் மதன காமராஜனும் சத்ரியனும் ஒன்றாக வெளியாகி இரண்டுமே ஹிட் அடித்தது. குணா படத்தோடு மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படம் வெளியானது. இரண்டுமே சுமாரான வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..

சிங்கார வேலன் படத்தோடு பரதன் படம் மோதி இரண்டு படங்களுமே ஆவரேஜ் வசூலை பெற்றது. தேவர் மகனோடு போட்டி போட்ட காவிய தலைவன் தோல்வி அடைந்தது. மகாநதியோடு போட்டி போட்ட சேதுபதி ஐபிஎஸ் அதிக வசூலை பெற்றது. நம்மவரும், பெரிய மருதும் ஒன்றாக வெளியாகி இரண்டுமே சுமாரான வெற்றியை பெற்றது. சதிலீலாவதியோடு கருப்பு நிலா வெளியாகி இரண்டுமே ஒரேமாதிரியான வசூலை பெற்றது.

அவ்வை சண்முகியோடு போட்டி போட்ட அலெக்ஸாண்டர் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆளவந்தானோடு போட்டி போட்ட தவசி படம் நல்ல வசூலை பெற்றது. அதேபோல், அன்பே சிவத்தோடு போட்டி போட்ட சொக்கத்தங்கம் நல்ல வசூலை பெற்றது. கமலும், விஜயகாந்தும் இறுதியாக மோதியது 2004ம் வருடம்தான். விருமாண்டியோடு எங்கள் அண்ணா போட்டி போட்டது. ஆனால், விருமாண்டிஅதிக வசூலை பெற்றது.

மொத்ததில் 22 முறை கமலும், விஜயகாந்தும் மோதியுள்ளனர். இதில், கமலின் படங்கள் 9 முறையும், விஜயகாந்தின் படங்கள் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆறுமுறை இரண்டு படங்களும் சுமாரான வெற்றியோடு தப்பித்துக்கொண்டது குறுப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் பொய் சொல்லி வசமாக சிக்கிய வீரபத்ரன்! வாங்கிய அடியை மறக்க முடியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top