விக்ரம் படப்பிடிப்பில் முதல் நாள் முதல் ஷாட்டில் லோகேஷ் கனகராஜூக்கு கமல் தந்த அதிர்ச்சி

உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை ஒரு ஜாம்பவனாக தன்னை நிரூபித்து வருகிறார்.

சகலாகலா வல்லவன் கமல்

அரசியல்வாதியாக, தனிமனிதராக பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டாலும் ஒரு சினிமா கலைஞனாக அவர் தொட்ட சிகரங்கள் ஏராளம். தமிழ் சினிமாவை, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி சென்றதில், கமலுக்கு முக்கிய பங்குண்டு. நடிப்புலகை பொருத்த வரை, சகலகலா வல்லவனாக தொடர்ந்து தன்னை கமல் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

கமல்ஹாசன்

Lokesh

பிளாக் பஸ்டர் மூவி விக்ரம்

கடந்தாண்டில், அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த படம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்த இந்த படம், பிளாக் பஸ்டர் மூவியாக, பல நூறு கோடி ரூபாய் வசூலித்தது. இதே பெயரில், 1986ம் ஆண்டில் கமல் அம்பிகா சத்யராஜ் ஜனகராஜ் நடித்த விக்ரம் படம் வந்தது. இதுவும் கமலுக்கு மிகசசிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில், விக்ரம் படம் முதல் நாள் ஷூட்டிங்கில் தனக்கு நடந்த சிலிர்ப்பான அனுபவம் குறித்து, டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருக்கிறார்.

ஏவிஎம் ப்ளோரில் ஷூட்

விக்ரம் படத்தோட முதல் நாள் ஷூட்டிங்குல பர்ஸ்ட் ஷாட் இன்னும் வைக்கலே, மேக்கப் போட, கமல் சார் 9 மணிக்கு வரச்சொல்லி இருந்தோம். எட்டே முக்கால் மணிக்கு கமல் சார் வந்துட்டார். நான் ஷெட்டுல அங்க இங்க சுத்திட்டு இருக்கேன். அப்போ, கமல் சார் என்னை கூப்பிட்டு, இந்த ப்ளோர் நீ சூஸ் பண்ணுனியா இல்லே புரொடக்‌ஷன்ல இருந்து சென்டிமெண்டா எதுவும் சொன்னாங்களா அப்படீன்னு என்கிட்ட கேட்டாரு. இல்லே சார், புரொடக்‌ஷன்ல இருந்து எதுவும் சொல்லல. என்னோட வசதிக்காக தான், ஏவிஎம் ல இந்த இடத்தை தேர்வு செஞ்சேன்னு சொன்னேன். அப்போ இல்லே, 36 வருஷத்துக்கு முன்னால, இதே இடத்துல தான் அந்த விக்ரம் படத்தோட முதல் ஷாட் எடுத்தேன், என்றார்.

கமல்ஹாசன்

Kamal

என்னால நம்ப முடியலே

என்னால, அதை நம்ப முடியல. அதிர்ச்சியா இருந்துச்சு. கரெக்டா நான் பிறக்கறதுக்கு ரெண்டு, மூனு மாசத்துக்கு முன்னால இது நடந்துருக்கு. எனக்கு பெரிய ஆச்சரியமா இருந்துச்சு, நினைச்சுக்கூட பார்க்க முடியல, என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

elango
elango  
Related Articles
Next Story
Share it