Cinema History
இந்த பொம்பளைய லேசா நினைச்சிராதீங்க? வடிவுக்கரசி பற்றி கமல் சொன்ன சீக்ரெட்!…
தமிழ் சினிமாவில் கமல் எப்பேர்பட்ட நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவைப் பற்றி அணு அணுவாக தெரிந்து வைத்த ஒரு என்சைக்ளோபீடியாவாக தன்னை மாற்றிக் கொண்டவர் கமல். சினிமாவில் எந்த ஒரு தொழில்நுட்பம் அறிமுகமானாலும் அதை எப்படி புகுத்தி அழகு பார்க்கலாம் என்பதை நோக்கமாகக் கொண்டு வரக்கூடிய ஒரு உன்னதமான நடிகர் கமல்.
ஒரு பாடம்
களத்தூர் கண்ணம்மாவில் இருந்து இன்று அவர் நடித்து வரும் இந்தியன் 2 படம் வரைக்கும் அவருடைய படங்கள் வருங்கால இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை சினிமாவிற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்.
இதையும் படிங்க :சீண்டிவிட்ட சினிமா உலகம்!.. வீம்புக்கு நடித்து பல்பு வாங்கிய அரவிந்த சாமி…
16 வயதினிலே என்ற திரைப்படத்தில் சப்பானியாகவும் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்திலும் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர். இப்படி ஏகப்பட்ட படங்கள் அவருடைய லிஸ்டில் பொதிந்து கிடைக்கின்றன. இந்த நிலையில் கமலை பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை பாரதிராஜா ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகி மூன்றாவது படமாக எடுத்தது தான் சிகப்பு ரோஜாக்கள். ஒவ்வொரு படத்திலும் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து ரிஸ்க் எடுத்த ஒரு மாபெரும் இயக்குனர் பாரதிராஜா அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்த நிலையில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் முதன் முதலில் ஒரு நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி.
இதையும் படிங்க :ஒரு நடிகைக்காக பாரதிராஜாவை விரட்டியடித்த படக்குழு! அப்படி என்ன செஞ்சிருப்பார்?
வரவேற்பாளராக இருந்த நடிகை
அதற்கு முன் வடிவக்கரசி கன்னிமாரா ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியாளராக வேலை பார்த்தாராம். இந்தப் படத்தில் ஒரு ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வடிவுக்கரசியை பற்றி கூறும் போது பாரதிராஜா தான் சொல்லாத வசனங்களை கூட ஸ்பாட்டில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.
உதாரணமாக அந்தப் படத்தில் ஒரு காட்சியில் படிவக்ரசியிடம் சிகரட்டை காட்டி ஆஃபர் பண்ணுவார் கமல். அப்பொழுது வடிவுக்கரசி அதை சாதாரணமாக வாங்கி பிடிக்க போவாராம். ஆனால் அது சீனிலேயே இல்லையாம். அதை தைரியமாக அவராகவே செய்தார் வடிவுக்கரசி என பாரதிராஜா கூறினார்.
இதையும் படிங்க :‘16 வயதினிலே’ படத்தை கேவலமா நினைச்சு நடிக்க மறுத்த நடிகர்கள் – அட அந்த நடிகர் கூடவா!..
இதை பார்த்துக் கொண்டிருந்த கமல் பாரதிராஜாவிடம் வடிவுக்கரசியை குறிப்பிட்டு இந்த பொம்பள எல்லாரையும் சாப்பிட்டு போயிருவா. சினிமாவில் ஒரு கலக்கு கலக்க போகிறார் பாருங்கள் என சொன்னாராம். இந்த ஒரு சம்பவத்தை பாரதிராஜா அந்த பேட்டியின் மூலம் கூறினார்.