இயக்குனர் சிகரம் பாலசந்தருடன் இணைந்து பணியாற்றியவர், பிரபல கதாசிரியர் அனந்து. இவரும் கமலும் மிக நெருக்கமானவர்கள். மன்மதலீலை படத்தில் அய்யராக வருபவர் இவர் தானாம். இவரும், கமலும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்று பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அனந்துக்கும் கமலுக்கும் இடையே அவ்வளவு நெருக்கம் இருந்தது. என்ன ஒரு விஷயம் இருந்தாலும் கமல் அனந்துவிடம் பகிர்ந்து கொள்வார். கமல் பெரிய அறிவுஜீவியாக இருப்பதற்கு அனந்தும் முக்கிய காரணம். கமல் ஆங்கிலப்படத்தில் நடிக்கச் சொன்னாலும் நடிப்பார்.
இதையும் படிங்க… இமேஜைத் தேடி போற ஆளு கேப்டன் அல்ல… அப்படி போயிருந்தா இப்படி எல்லாம் செய்வாரா..?
எந்த சப்ஜெக்ட் பற்றி வேண்டுமானாலும் அவர் பேசிவிடுவார். இதைப் படிடா என அனந்து தான் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துக் கொடுப்பார். கமலைப் பொருத்தவரை முதலில் அவரது தகப்பனார், பாலசந்தர், அனந்து இதுதான் அவரது ஆர்டர். அதனால் தான் இப்போதும் கமல் ஆபீஸில் பாலசந்தர் சிலை, அனந்து போட்டோ இருக்கும். ஒரு தடவை எனக்கு போன் பண்ணினார் கமல். ரொம்ப நடுக்கத்தோடு பேசினார்.
என்ன கமல்னு கேட்டேன். இல்ல சார் என் போன்ல பாலசந்தர் சார், அனந்து சார் பேரை நான் டெலிட் பண்ண மனசு இல்லாம அப்படியே வச்சிருப்பேன். அப்போ போன்ல நான் பார்க்கும்போது அனந்துன்னு இருந்ததும் அதை டச் பண்ணிட்டேன். அப்புறம் ரிங் போச்சு.
இதையும் படிங்க… அஜித் அரசியலுக்கு வருவார்னு ஜாதகத்திலேயே இருக்கு!.. புள்ளி விபரம் சொல்லும் இயக்குனர்…
ஒருத்தர் எடுத்து அனந்துன்னு சொன்னாரு. நான் போனைக் கட் பண்ணிட்டேன். எனக்கு வெடவெடத்துப் போச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. அது மாதிரி எல்லாம் நான் ஆக மாட்டேன். அப்புறம் டக்னு உங்களோட கொஞ்சம் பேசுனா ரிலாக்ஸா இருக்கும்னு நினைச்சேன்னு சொன்னாரு. நான் சொன்னேன்.
யப்பா அந்த நம்பர் அவங்க வீட்ல இருக்கும். அவங்க பிரதர், சிஸ்டர்ஸ் யாராவது எடுத்துருப்பாங்க. நார்மலா அனந்து சார் வீடுன்னு ஆரம்பிச்சிருப்பாங்க. எல்லாம் ஓகே சார். ஆனா என்னால அதைத் தாங்கிக்க முடியலன்னு சொன்னார் கமல். அந்த அளவு இன்னும் அவர் அனந்துவின் இழப்பு தாங்காமல் பாதிப்புக்குள்ளானவர் தான் கமல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…