Cinema History
உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!
அஜீத்துக்குப் பிறகு எந்தப் பட்டமும் வேணாம் என கமல் உதறித்தள்ளி விட்டார். ‘தல’ என்ற பெயர் வேணாம். அஜீத்தே போதும்னு சொன்னார் அவர். அதே மாதிரி ‘உலகநாயகன்’ வேணாம். கமலே போதும் என்றார் இவர். ஆனால் கமலின் குடும்பப் பெயர்ல ‘ஹாசன்’ என்று வைத்து இருப்பார்கள். அதனால் தான் சாரு ஹாசன், சந்திரஹாசன் என்றெல்லாம் அவரது சகோதரர்களின் பெயரும் இருக்கும்.
முஸ்லிம் பெயர்
Also read: போட்டோகிராபரிடம் எரிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது அங்குள்ள ஏர்போர்ட்டில் தீவிரமாக பரிசோதனை செய்தார்களாம். அப்போது நடிகர் ஷாருக்கானிடமும் பல மணி நேரம் விசாரித்தார்களாம். அவரது பெயர் அப்படி இருப்பதால் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அதே போல கமல்ஹாசன் ஒரு முஸ்லிம் பெயர்னு நினைச்சி அப்படி விசாரிச்சாங்களாம். அது நடந்தது கனடாவில். அதுவும் நாலு மணி நேரம் விசாரிச்சாங்களாம். அதுக்குப் பிறகு நிறைய பேட்டி கொடுத்தாராம் கமல்.
நாலு மணி நேரம்
‘என் பேரு கமல்ஹாசன். என்னை முஸ்லீம்னு நினைச்சி விசாரிச்சிட்டாங்க. நடந்தது அதுதான். அதுக்காக அவங்ககிட்ட வாதம் பண்ணலை. கோபப்படலை. எதுவுமே பண்ணலை. என்னோட பாஸ்போர்ட், என்னோட ஆவணங்கள் இதெல்லாம் சென்னையில் இருந்து வரவழைச்சி கொடுத்த பிறகு அவங்க பார்த்தாங்க. அப்புறம் நாலு மணி நேரம் கழிச்சி அனுப்பிச்சாங்க.
ஏன் கமல்ஹாசன்னு வச்சிருக்கீங்க?
இப்போ எங்க அப்பா இருந்து இருந்தாருன்னா ‘ஒரு அண்ணனுக்கு சந்திரஹாசன்னும், இன்னொரு அண்ணனுக்கு சாருஹாசன்னும் வச்ச நீங்க எனக்கு ஏன் கமல்ஹாசன்னு குசும்பா ஒரு பேரு வச்சிருக்கீங்க? இப்படி எல்லாம் நடக்கும்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குமான்னு ஒரு கேள்வி கேட்டுருப்பேன்’னு சிரிச்சிக்கிட்டே சொன்னாராம் கமல். இன்னைக்கு இந்த வயசிலேயும் ஏஐ தொழில்நுட்பத்தைப் படிக்கறதுக்காக அமெரிக்காவுக்குப் போயிருக்காரு.
டெல்லி கணேஷ் மறைவு
Also read: அந்த பொண்ணு கொடுத்து வச்சவங்களா?!.. குஷ்பூ தன் மகளை கட்டிக் கொடுப்பாரா!… பொங்கிய பிரபலம்!…
அவரோட அமரன் படம் மிகப்பெரிய ஹிட் ஆகிடுச்சு. அவரது ஆத்ம நண்பர் டெல்லி கணேஷ் மறைவுக்குக் கூட அவர் வரலை. சென்னையில் இருந்து இருந்தாருன்னா காலையில இருந்து அங்கே தான் இருந்துருப்பாரு. இன்னைக்கும் கமல் பேசுற ஒரு விஷயம் பேசுபொருளாக ஆகறதுன்னா அது அவரால மட்டும் தான் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.