தீபாவளி வந்து விட்டாலே அப்போதெல்லாம் ரசிகர்களுக்கு சந்தோஷம் கரைபுரண்டு ஓடும்.
அந்த வகையில், 2000மாவது ஆண்டில் வெளியான படங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்ற ரீதியில் போட்டி கடுமையாக இருக்கும். அந்த ஆண்டில் விஜய், கமல், அர்ஜூன் நடித்த படங்கள் வெளியாகின. அவற்றில் எது ஜெயித்தது என்று பார்ப்போம்.
பிரியமானவளே

கே.செல்வபாரதி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம். சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சவுத்ரி, எஸ்.பி.பி., விவேக், வையாபுரி, ராம்ஜி, கசான்கான், தலைவாசல் விஜய், சங்கீதா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
வெல்கம் பாய்ஸ், என்னவோ என்னவோ, எனக்கொரு சினேகிதி, ஜூன் ஜூலை மாதத்தில், மிசிசிபி நதி, அழகே அழகே என பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
வானவில்

மனோஜ்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அர்ஜூன், அபிராமி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் செம கிளாஸ்.
மணிவண்ணன், தேவன், லட்சுமி, உமா, ரூபாஸ்ரீ, சிங்கமுத்து, விசு, சந்தானபாரதி, விசு உள்பட பலர் நடித்துள்ளனர். வெளிநாட்டு காற்று, ஓ பெண்ணே, ஆசை மகனே, பிறையே பிறையே, ஹோலி ஹோலி உள்பட பல அழகான பாடல்கள் உள்ளன.
தெனாலி

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த படம் தெனாலி. சிங்கத்தமிழ் பேசி திரையரங்கை தெறிக்க விட்டு இருந்தார் கமல். படம் முழுவதும் டாக்டர் ஜெயராமுடன் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. படத்தில் கமலின் மாறுபட்ட நகைச்சுவை நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. படம் 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது.
கிரேசி மோகன் வசனத்தில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இப்படி எல்லாம் கூட காமெடியா நடிக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த படம். ஒரு எலியை வைத்தே 20 நிமிடம் காட்சியை ஓட்டியிருப்பார்கள். அவ்வளவு ஜாலியான படம் இந்த தெனாலி. ஹீரோயின்களாக ஜோதிகா, தேவயாணி என இருவர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அத்தனையும் செம மாஸ்.
ஆலங்கட்டி மழை, அத்தினி சித்தினி, இஞ்சேருங்கோ, போர்க்களம், சுவாசமே, தெனாலி ஆகிய பாடல்கள் உள்ளன.
