‘தக் லைஃப்’ படம் பார்த்து கமல் சொன்ன வார்த்தை! இதுல ரெட்டை அர்த்தம் இருக்கே

by Rohini |   ( Updated:2025-05-02 06:29:27  )
thug
X

thug

Thug Life : கமல் நடிப்பில் வரும் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கமல் நிறுவனமும் மணிரத்தினமும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் சிம்பு திரிஷா அசோக் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த படத்தில் நடித்த நடிகர்களே வேறு. ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என இருக்க திடீரென அவர்கள் இருவரும் இந்த படத்தில் இருந்து விலகினார்கள். அதன் பிறகு தான் சிம்பு இந்த படத்திற்குள் உள்ளே வந்தார். அதற்குள் ஜெயம் ரவிக்கும் சிம்பவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் தான் சிம்பு உள்ளே நுழைந்த பிறகு ஜெயம் ரவி விலகிவிட்டார் என்றும் பல தகவல்கள் வெளியாகின.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு திரிஷா இந்த படத்தில் இணைந்துள்ளனர். அதனால் அவர்கள் இருவருக்கும் இந்த படத்தில் எந்த மாதிரியான ஒரு காட்சி அமைப்பு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசர் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் உள்ளாக்கி இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் வேலைகளையும் படக்குழு ஆரம்பித்துவிட்டது .இடையில் கமல் திரிஷா சிம்பு என அனைவரும் படத்தை பற்றி ஒரு நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் தக் லைப் படத்தை கமல் தற்போது பார்த்திருக்கிறார். பார்த்ததுமே சிம்புவிடம் படம் ஆரம்பிக்கும் பொழுது இது என்னுடைய படமாக இருந்தது. முடியும் பொழுது உன்னுடைய படமாக மாறிவிட்டது என கூறினாராம் .

அந்த அளவுக்கு படத்தில் சிம்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல இதில் கமல் ஒரு நெகட்டிவ் ஷேடில் நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் படத்தில் ஃபுல் ஸ்கோர் அடிப்பது சிம்பு தான் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. கமல் சொன்னதிலிருந்து பெருமையாக சொன்னாரா அல்லது நமக்கு இந்த படத்தில் பெயர் இருக்காதோ என்ற வகையில் சொன்னாரா என்பது தெரியவில்லை.

ஆனால் கமலைப் பொறுத்தவரைக்கும் தனக்கு அடுத்து இளம் தலைமுறைகள் தான் இந்த தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். அதனால் அடுத்த தலைமுறை நடிகர்களை அவர் எப்போதுமே ஊக்குவித்து தான் பேசுவார். அந்த வகையில் தான் சிம்புவிடமும் இந்த மாதிரியான ஒரு வார்த்தையை சொல்லி இருப்பார் என்று தோன்றுகிறது.

Next Story