‘அவ்வை சண்முகி’க்கே டஃப் கொடுக்கும் ரோல் : இந்தியன் 2-வில் மிரட்டப்போகும் லேடி கெட்டப்!...

தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு உலக நாயகனாக கமல் திகழ்ந்து வருகிறார். தற்போது அவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படத்தின் மற்ற சில வேலைகளுக்காக கமல் சங்கருடன் இணைந்து இப்போது அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

kamal1

kamal1

இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் முடிந்தாலும் இன்னும் ஒரு மாத காலம் அமெரிக்காவிலேயே கமல் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் அடுத்த படத்திற்காக மிகவும் சிறு வயது கமல் ஆக நடிக்க போவதால் அதற்காக தன்னை தயார்படுத்தப் போவதாக அமெரிக்காவில் இருக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கமல் அவ்வை சண்முகி படத்தில் லேடி கெட்டப் போட்டுக்கொண்டு ஜெமினியை வந்து பாரு என்று செய்திருப்பார். அதன் பிறகு அவர் லேடி கெட்டப் போட்டது தசாவதாரம் படத்திற்காக ஒரு மாமி வேடத்தில் பாட்டியாக நடித்திருப்பார்.

kamal2

kamal2

இந்த இரண்டு படத்திலுமே அவர் லேடி கெட்டப்பில் அற்புதமாக அசத்தியிருப்பார். அதன் பிறகு இந்தியன் 2 படத்திற்காக கமல் ஒரு லேடி கெட்டப்பில் வருகிறாராம். அது அந்த இரண்டு படங்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமான கெட்டப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :இந்த தடவ வாக்கு மீற மாட்டோம்! விஸ்வரூபம் எடுத்த ‘விடாமுயற்சி’ – ஆயுதத்தை கையில் எடுத்த மகிழ்திருமேனி

நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல் இந்த இந்தியன் 2 படத்தில் லேடி கெட்டப்பில் வருவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Related Articles

Next Story