Categories: Cinema News latest news

இழந்த இளமையை கொண்டு வரும் முயற்சியில் கமல்! அதுக்காக இப்படியா?

உலக நாயகன் கமல் எந்தவொரு படத்திற்கும் வித்தியாசமான முடிவை எடுப்பதுதான் வழக்கம். ஒன்று பல வித கெட்டப்களை போட்டுக் கொண்டு அனைவரையும் மிரளவைப்பார். இல்லையென்றால் புதியதாக ஒரு டெக்னாலஜியை கொண்டு வந்து அசரவைப்பார். சினிமா சினிமா மட்டும் தான் கமலுக்கு உரித்தான ஒன்று. அதனாலேயே சினிமாவை பற்றி தினமும் எதாவது ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்.

kamal

இந்த நிலையில் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கிறார். கூடவே இயக்குனர் சங்கரும் உடன் சென்றிருக்கிறார். படத்தில் இன்னும் சின்ன சின்ன வேலைகள் இருக்கின்றதாம். அதை  அமெரிக்காவில் இருந்தே பார்க்க இருப்பதால் சங்கரும் கூட சென்றிருக்கிறாராம்.

இதையும் படிங்க : கோலிவுட்டிற்கே சவால் விட காத்திருக்கும் காளி வெங்கட்! என்னப்பா கமுக்கமா இருந்து சம்பவம் பண்றாரே

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்து கமல் தன்னுடைய அடுத்தப் படத்தில் இணைய இருக்கிறார். அந்தப் படத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞனாக நடிக்கிறாராம். அதற்காகவே கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்து இளமை தோற்றத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட போகிறாராம் கமல்.

kamal2

அதை எல்லாம் முடித்துக் கொண்டு தான் சென்னை திரும்புவாராம். படமுழுக்க 30 வயது இளைஞனாக வருவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை மேற்கொள்ளும் கமல் இந்தப் படத்தில் இப்படி ஒரு மாறுபட்ட முயற்சியில் ஈடுபட போகிறார். 60 வயதை கடந்தவர் எப்படி 30 வயது மதிக்கத்தக்க இளைஞனாக வரமுடியும் என்பதிலேயே ரசிகர்கள் வியப்புடன் இருக்கிறார்கள்.

Published by
Rohini