பாடலாசிரியருக்காக சூட்டிங்கையே கேன்சல் செய்த கமல்... இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?
கவிஞர் கபிலன் வைரமுத்து 14 வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு எழுதத் தொடங்கியவர். முறைப்படி கவிதை புனைவதற்கான இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர் தான் எழுதிய ஒரு புத்தகத்தை கமல் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். அதை எப்படி நடத்தி முடித்தார் என்பதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு சொல்கிறார்.
இதையும் படிங்க... ‘கல்கி’ படம் பார்த்த சூப்பர் ஸ்டார்! படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் மாதேஷ் என்னோட நண்பர். சாக்லேட் படம் அவர் தான் இயக்கினார். அப்போ அவர் 'முதல்வன்' படம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. 'நான் தெரு ஓவியம்னு ஒரு புத்தகம் போட்டுருக்கேன். கமல் சார்கிட்ட கூட்டிட்டுப் போக முடியுமா'ன்னு மாதேஷிடம் கேட்டேன்.
அவரும் 'சரி'ன்னு அழைச்சிட்டுப் போனார். நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே கமலின் தீவிர ரசிகர். அப்போ ஆழ்வார்பேட்டை ஆபீசுக்குப் போறேன். அரை மணி நேரமா கமல் சாரிடம் பேசினேன். புத்தகத்தைக் கொடுத்தேன். 'சரி நான் படிக்கிறேன்'னாரு. அங்கு ஒரு நண்பர் இருந்தார். எங்கூட படிச்சவர் தான்.
ரசிகர் மன்ற நிர்வாகி குணசீலன் தான் அவர். அப்புறம் அவர்கிட்ட போன் பண்ணி அடிக்கடி பேசி கமல் சார்கிட்டயும் பேசினேன். 'புத்தகம் வெளியிட ஒரு விழா வைக்கிறேன். நீங்க வந்தா நல்லாருக்கும்'னு கமலிடம் ஒரு நாள் அனுமதி கேட்டேன். 'சரி கூப்பிடுங்க'ன்னாரு. 'கவிதையைப் படிச்சிப் பார்த்தேன். நல்லாருக்குதே'ன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் 3 நாள்களைக் குறிச்சிக் கொடுத்தேன். அதுல ஒரு நாளை கமல் செலக்ட் பண்ணினார்.
சரின்னு அந்த தேதில புத்தக வெளியீட்டு விழாவை வச்சோம். ராணி சீதை மன்றத்துல தான் நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணியிருந்தோம். அன்னைக்கு கமல் சார் 'தெனாலி' பட சூட்டிங்கிற்கு கொடைக்கானல் போயிருந்தாரு. ஆனா வரேன்னு சொல்லிட்டாரு. வந்துட்டு நிகழ்ச்சி எல்லாம் முடிச்சிட்டு போனாரு. அன்னைக்கு மாலை 5 மணில இருந்து 7 மணிக்குள்ள நிகழ்ச்சியை நடத்தி முடிச்சிட்டோம்.
கமல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பில் இருந்து வந்துட்டு இங்கே இருந்து டிரெய்ன்ல மதுரை போனாரு. அந்த நிகழ்ச்சிக்கு தாணுவும் வந்து இருந்தாரு. அவர் தான் கமல் சாரிடம் இருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் நன்றி சொல்றதுக்கு எக்மோர் போனேன். அது தான் முதல் சந்திப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?
தசாவதாரம் படத்தில் மண்ணைப் பற்றி கபிலன் ஒரு கவிதை சொல்வார். கவிஞராகவே அவரை சினிமாவிற்குள் அழைத்து வந்திருப்பார் கமல். அதன்பிறகு கமலின் பல படங்களில் பாடல் எழுதி இருக்கிறார். இந்தியன் 2 படத்திலும் காலண்டர் சாங்கை இவர் தான் எழுதியுள்ளார்.