KamalHassan: தமிழ் சினிமா இன்று பார்த்து வரும் பெரும்பாலான டெக்னாலஜியை முதன்முதலாக கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியது கமலாக தான் இருக்கும். அவர் தனி ஆளாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்தவர். அவர் ஆரம்ப நாட்களில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்.
களத்தூர் கண்ணம்மாவில் முதலில் கமல் ஒப்பந்தம் செய்யப்படவே இல்லை. இன்னொரு குழந்தை நட்சத்திரத்தினை 10 ஆயிரம் கொடுத்து புக் செய்து விட்டனர். அந்த நேரத்தில் சினிமாவின் மீது ஆர்வத்தால் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரை சந்தித்தார் கமல்ஹாசன்.
இதையும் படிங்க: இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?!.. நடிகர்களை மொத்தமா வேஸ்ட் பண்ன லோகேஷ் கனகராஜ்!…
அவரின் துறுதுறுப்பான பேச்சு, கலையான முகத்தால் கவரப்பட்டார் செட்டியார். உடனே கமலை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து விட்டாராம். கமலின் முதல் படப்பிடிப்பில் கண்களின் வார்த்தை புரியாதோ என்ற பாடல் தான் உருவாக்கப்பட்டது.
குழந்தையாக இருந்த கமலை ஜெமினிகணேசனும், சாவித்ரியும் தங்கள் குழந்தையாகவே பாவித்தார்களாம். அவர் வளர்ந்து இளைஞராக வந்த போது கூட பாலசந்தரிடம் இவனை பெரிய நாயகனாக மாற்ற வேண்டியதும் உங்கள் பொறுப்பு என்பதை ஜெமினி தான் முதலில் வலியுறுத்தி இருக்கிறார்.
பார்த்தாலே பசி தீரும் படத்தின் போது தான் கமல்ஹாசன், சிவாஜியை பார்த்து இருக்கிறார். சிவாஜி மாதிரி வசனங்களை அச்சு பிசராமல் சரளமாக பேசும் திறனை கமல்ஹாசன் கொண்டு இருந்தார். அதை ஒருமுறை சிவாஜி முன்னரும் பேசிக்காட்டினாராம். அப்போது இருந்து இருவருக்குமே ஒரு பாசம் இருந்ததாம்.
இதையும் படிங்க: இத போய் அஜித்கிட்ட காப்பி… அதுவும் விஜய்..! உருட்டலாம்… அதுக்குனு இப்டியா? லியோ பீதியோ..!
அதைப்போல, எம்.ஜி.ஆரை முதன்முதலில் ஆனந்தஜோதி படப்பிடிப்பில் தான் கமல்ஹாசன் சந்தித்து இருக்கிறார். அப்போது கமலை பார்த்த எம்.ஜி.ஆர் நீ என்னவாக வேண்டும் எனக் கேட்டாராம். நான் ஒரு நடிகனாக வேண்டும் என அவர் சொல்லவே இல்லையாம். எனக்கு விஞ்ஞானியாக வேண்டும் என்று தான் ஆசை எனக் கூறினாராம்.
ஆனால் அவரை சினிமா உலகம் வேறு லெவலுக்கு அழைத்து வந்து விட்டது. பல தேசிய விருதுகள், ஆஸ்கார் நாமினி பட்டியலில் இடம் என ஒருவரால் முடிந்த எல்லாவற்றையும் கமல் மட்டுமே செய்து இருக்கிறார். அவர் எப்போதுமே கோலிவுட்டின் உலக நாயகன் தான் என்பது அவர் கேரியர் சொல்லும் உண்மை என்றே கூறலாம்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…