சினிமாவைப் போல அரசியலிலும் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைப்பாரா கமல்..?! தயார் நிலையில் திட்டங்கள்..!!
கமல் பிளாக் பஸ்டர் மூவி விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் பட்சத்தில் இந்தப்படத்தில் கமல் அரசியல் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 1996ல் வெளியான இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதில் ஊழலை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டு இருக்கும். படத்தின் கிளைமாக்ஸில் இந்தியனுக்கு சாவே கிடையாது என்று முடித்து 2ம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பை அப்போதே ஏற்படுத்தி விட்டார்கள். 26 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அதற்கான விடை கிடைத்துள்ளது.
மேக் அப்பிற்காக கமல் ரொம்பவே மெனக்கிட்டு வருகிறார். ஒரு மணி நேரம் தான் இந்த மேக் அப் நிற்கிறதாம். அதனால் அடிக்கடி மேக் அப் போட வேண்டியுள்ளதாம்.
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது கமல் தனது அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
எந்த ஒரு கருத்துகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாகத் தெரிவிப்பதில் தைரியசாலி தான். கடந்த தேர்தலில் கமல் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதைத் தொடர்ந்து வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீருவேன் என்று சூளுரைத்துள்ளார்.
தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணி அமைக்குமா...அப்படி அமைத்தால் சீமானுடன் கூட்டணியா என்றெல்லாம் பேச்சுகள் அடிபடுகின்றன.
கூட்டணி பற்றி பேசாத கமல் திடீரென கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சியை பலப்படுத்துங்கள் என சமீபத்தில் நடந்த நிர்வாகிகளின் கூட்டத்தில் கமல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை திமுகவுடன் கூட்டணி சேருமா என்றும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
கமலிடம் சொன்ன ரஜினி
டைரக்டர் பி.வாசு ரஜினியின் நெருங்கிய நண்பர். வாசு ஒருமுறை ரஜினியிடம் சொன்னார். நாயகன் மாதிரி நீங்க ஒரு படம் பண்ணனும்னு கேட்டார். அப்போது 2 பெக் அடிச்சு படம் பார்த்தார். ஆனால் நாயகன் போதையை அந்தப் போதை மிஞ்ச முடியவில்லை.
மறுநாள் கமலிடம் சொன்னார் ரஜினி. கமல் உங்க நாயகன் படம் பார்த்தேன். அது மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு வாசு சொன்னாரு. பார்த்துக்கோங்க. 2 பெக் அடிச்சு படம் பார்த்தேன். ஆனா போதை ஏறல. நாயகன மிஞ்ச முடியல. ரொம்ப பவர்புல் கேரக்டர் கமல்.
அது உண்மை தான். கமலை மாதிரி பல கேரக்டர்களில் சின்சியராக தற்போது எவராலும் நடிக்க முடியாது.
தற்போது உலக நாயகன் கமல் ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம். அரசியல், சினிமா இரண்டையும் விடக்கூடாது. சினிமாவில் எப்படி தடைகள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி எப்படி வெற்றி வாகை சூடினேனோ அதே போல் தடைகள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் உடைத்து வெற்றி வாகை சூடுவேன்னு தற்போது நடந்த மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி மொழி எடுத்துள்ளார் கமல். இப்பவே தயாராகி விட்டார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் பிரசார வேன். கட்சி வளர்ச்சிக்கும், தேர்தலுக்கும் இந்த வேனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் இப்படி கமல் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
யாரென்று புரிகிறதா?
யாரென்று புரிகிறதா? இவன் தீயென்று தெரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா? யாருக்கும் அடிமை இல்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை. காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காட்டுக்கும் காயம் இல்லை என்ற தெறிக்க விட்ட பாடல் விஸ்வரூபம் படத்திற்காக இடம்பெற்றது தான் தற்போது நினைவுக்கு வருகிறது.