
Cinema News
இது ஒன்னு போதும்ய்யா…கடிதம் எழுதிய கமல்…. கண்ணீரில் உறைந்த லோகேஷ்…!
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் உலகமுழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. எதிர்பார்ப்பிற்கு மேலாக நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வருடங்கள் கழித்து கமலை திரையில் பார்ப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரசிகன் என்ற முறையில் கமலை தத்ரூபமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் லோகேஷ். இந்த நிலையில் கமல் தற்போது லோகேஷுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தான் இப்பொழுது வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில், அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால்.மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும். பொதுவெளியில் என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள் ஆக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.
ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிட அதிகம். உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம் யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையில் இருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் தொடர வாழ்த்துக்கள்.என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த லோகேஷ் மனம் உருக தனது வாழ்நாள் சாதனையாக உணர்கின்றேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.