Categories: latest news

இந்த நடிகையை வர்ணித்து கமல் எழுதிய ரொமாண்டிக் பாடலா அது? ஹிட்டானதுக்கு இதுதான் காரணமா?

Actor Kamal: கலையுலக மேதாவி கமல் என்ற பெயருக்கு சொந்தக்காரராகவே வாழ்ந்து வருகிறார் நடிகர் கமல். சினிமாவில் இன்னும் எவ்வளவு புதுமைகளை புகுத்தலாம் என்று வெறி கொண்டு பணியாற்றி வருகிறார். சினிமாதான் எல்லாம் என சிவாஜிக்கு அடுத்தபடியாக இருப்பவர் கமல். நடிப்பில் சிவாஜிக்கு பிறகு கமலை குறிப்பிடலாம். இருவரும் சேர்ந்து தேவர் மகன் படத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.

சினிமாவில் தெரியாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். எல்லாத் துறைகளும் கமலுக்கு அத்துப்புடி. ஒவ்வொரு நாளும் புதுபுது விஷயங்களை கற்றுக் கொள்கிறார் கமல். அவரின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியன் 2 படம் எந்த மாதிரியான தாக்கத்தை அரசியல் ரீதியாக ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?

அடுத்ததாக மணிரத்னத்துடன் தக் லைஃப் படத்திலும் இணைந்திருக்கிறார். தேர்தலுக்கு பிறகு முழு மூச்சுடன் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்களை போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதில் சிறந்த கலைஞராகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார் கமல்.

சமீபகாலமாக ஆக்‌ஷன் படங்களிலேயே கவனம் செலுத்தி வரும் கமல் ஆரம்பகாலங்களில் பக்கா நகைச்சுவை படங்களிலும் நடித்து கலக்கியிருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சதிலீலாவதி படத்தை சொல்லலாம். அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக கோவைசரளா நடித்திருப்பார். கொங்கு தமிழில் மாறி மாறி இருவரும் பேசுவது ரசிக்கும் படியாக அமைந்தது.

இதையும் படிங்க: ஸ்ருதியை சந்தித்து பேசிய மீனா… ரவியை திட்டிய முத்து… இதே வேலையா போச்சு!

அந்தப் படத்தில் ஒரு ரொமாண்டிக் பாடலான ‘மாறுகோ மாறுகோ’ பாடல் எப்பேற்பட்ட ஹிட் என அனைவருக்கும் தெரியும். படத்தின் மற்ற காட்சிகள் எல்லாம் முடிந்து பேக் அப் என்று சொன்னதும் திடீரென கமல் ஒரு பேப்பரை எடுத்து கோவை சரளா முன் உட்கார்ந்தாராம். கோவை சரளாவை பார்த்துக் கொண்டே அந்த பேப்பரில் ஏதோ எழுதினாராம். சரியாக 15 நிமிடத்தில் முழுவதும் எழுதி கோவை சரளாவிடம் காட்டியிருக்கிறார்.

அதுதான் இந்த மாறுகோ மாறுகோ பாடலாம். அப்போது என்ன இவரு? நம்மள பார்த்தே ஏதோ எழுதுகிறாரே என்று கோவை சரளா நினைத்திருக்கிறார். ஆனால் பாடல் வரிகள் என அவருக்கு தெரியாதாம். உடனே இதுதான் பாடல். நாளைக்கு ரெக்கார்டிங். மறு நாள் சூட்டிங் என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இதை ஒரு பேட்டியில் கோவைசரளா கூறினார்.

இதையும் படிங்க: 40 நாள் கழிச்சு கீர்த்தி சுரேஷ் பார்த்த அந்த வேலை!.. பெட்ல யாரோட படுத்துருக்காரு பாருங்க!..

Rohini

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

47 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago