எனக்கு இது பத்தாது இன்னும் வேணும்.! கமல்ஹாசனை சங்கடப்படுத்திய இளம் ஹீரோ.!
சமீபகாலமாக உலகாயகன் கமல்ஹாசன் மீண்டும் திரைத்துறையில் சூறாவளியாக இயங்க ஆரம்பித்துள்ளார். மீணடும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது படத்தை மட்டுமின்றி, மற்றவர்கள் படத்தையும் தயாரிக்கும் முனைப்பில் இயங்கி வருகிறார்.
ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிக்க , ரங்கூன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் போக வேறு சில படங்களும் பேச்சுவார்த்தை அளவில் இருக்கிறது.
அதில் ஒன்று தான் முத்தையா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம். முதலில் முத்தையா இயக்கத்தில் கமல் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது இல்லை ஆர்யா தான் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யும் நொடி வரை சென்று விட்டதாம்.
இதையும் படியுங்களேன் - பீஸ்ட் தியேட்டரில் 'ஆலுமா டோலுமா'.! அதகளம் செய்த அஜித் ரசிகர்கள்.!
பிறகு எனோ இன்னும் இந்த கூட்டணி நடைபெறாமல் இருக்கிறது. காரணம் என்னவென்று விசாரித்தால் ஆர்யாவுக்கு OTTயில் நல்ல மார்க்கெட் உள்ளதாம் 14 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் இதனை தரும் முடிவில் கமல் தரப்பு யில்லை என கூறப்படுகிறது.
ஆதாலால், ஆர்யா , இயக்குனர் முத்தையாவை அழைத்து தனியாக பேசி, இங்கு சம்பளம் பிரச்சனை நிலவுகிறது. இதே கதையை வேறு நிறுவனத்திற்கு நாம் செய்யலாம் என அழைத்துள்ளாராம். இந்த செய்தியை அறிந்த கமல் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.