
Cinema News
இனி அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க கூடாது.! உலகநாயகனின் உறுதிமொழி.! ரசிகர்கள் ரெம்ப பாவம் சார்..
ஒரு காலத்தில் கமல் படம் என்றாலே அதில் கட்டாயம் காதல் காட்சி மிக அருமையாக இருக்கும். காதல் பாடல்கள் கதாநாயகியுடன் ரொமான்ஸ் காட்சிகள், கண்டிப்பாக ஒரு முத்த காட்சி என்று இளமை ததும்பும் விதமாக இருக்கும்.
சமீபத்திய படங்களான விஸ்வரூபம் படத்திலும், பாபநாசம் படத்தில் கூட ரொமான்ஸ் காட்சி நன்றாக இருக்கும். உத்தம வில்லன் படத்தில் ஆண்ட்ரியாவுடன் உதட்டு முத்தக்காட்சி, விஸ்வரூபம் படத்தில் படுக்கையறை காட்சி என்று இளைஞர்களை குதூகலப்படுத்தும் காட்சிகள் கண்டிப்பாக ஏதேனும் ஒன்று கமல் திரைப்படத்தில் இடம்பெறும்.
ஆனால், இவை எதுவுமே இல்லாமல், ஏன் கதாநாயகி கூட இல்லாமல் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ளது. தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்தது, இளம் இயக்குனருடன் கைகோர்த்தது தான் இந்த மிகப்பெரிய வெற்றி கிடைத்ததற்கு காரணம் என கமல்ஹாசன் நம்புகிறாராம்.
இதையும் படியுங்களேன் – இணையத்தில் லீக் ஆன ‘தளபதி 66’ பட விஜய் லுக்!…..! ப்ப்பா தளபதி எப்போதும் ஸ்மார்ட்தான்.!
அதன் காரணமாக இனி வரும் படங்களில் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது என உறுதி கொண்டுள்ளாராம் கமல்ஹாசன். இனி காதல் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் அவர் வந்துள்ளாராம்.
இந்த செய்தியை கேட்ட கமல் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகிதான் உள்ளனர். ஏன் என்றால் கமல் படம் என்றாலே இளமை ததும்பும் காட்சிகள் இருக்கும். ஆனால் இனி அவற்றை பார்க்க முடியாதே என்று வருத்தத்தில் இருக்கின்றனராம். இருந்தாலும் விக்ரம் திரைப்படம் போல நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்வித்தால் போதுமென்ற மனநிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.