Connect with us
saravana store

விருது இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்? – லீக் செய்த பிரபல நடிகை….

kamal-4

Cinema News

விருது இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்? – லீக் செய்த பிரபல நடிகை….

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க சிறந்த திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் வெற்றிமாறன்.

இவர் இயக்கும் திரைப்படங்கள் விருதுகளை குவிக்கும். அசுரன் படத்திற்கு தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். வெற்றிமாறனுக்கும் விருது கிடைத்தது.

vetri-maaran

தற்போது சூரி – விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், விஜயை வைத்தும் ஒரு படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. விஜயை வைத்து வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக கொண்டது எனவும் கூறப்படுகிறது.

vetri

இந்நிலையில், கமல்ஹாசனும் வெற்றிமாறனும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனராம். இந்த தகவலை கமலுடன் பல படங்களில் நடித்தவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவருமான நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

kamal-2

Bigg Boss

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் விக்ரம் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். அப்படத்திற்கு பின் அவர் இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top