More
Categories: Cinema News latest news

முக்கிய இயக்குனர்கள் படங்கள்!…மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கமல்…

தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருபவர் கமல்ஹாசன். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2 தான். இப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. கடந்த 3 வருடங்களாக அவரின் நடிப்பில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை.

அதே நேரம் லைக்கா தயாரிக்க இந்தியன் 2 படத்தின் பூஜை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் கால்ஷீட், படப்பிடிப்பில் விபத்து நடந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் என தொடர்ச்சியாக இப்படக்குழு சிக்கலை சந்தித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் ஒன்றைரை வருடங்கள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

Advertising
Advertising

மேலும், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கமல்ஹாசன் அரசியலில் பிஸி ஆனார். ஒருபக்கம் லைக்காவுக்கும், ஷங்கருக்கும் பஞ்சாயத்து இழுத்து கொண்டே சென்றது.

தற்போது அனைத்தும் முடிந்து கமல்ஹாசன் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார். ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இடையில் ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை சந்தித்து அவர்களுடனும் பேசி வருகிறார். அதோடு, இந்தியன் 2 பிரச்சனை தீர்க்கப்பட்டு டிசம்பர் 15ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கவுள்ளது.

எனவே, கமல்ஹாசன் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கவுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
சிவா

Recent Posts