கமல் செய்ததை மறக்கவே முடியாது!.. யாரும் செய்ய மாட்டாங்க!.. நெகிழும் ஜனகராஜ்...

80களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்தவர்தான் ஜனகராஜ். கரகரப்பான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். கவுண்டமணி கத்தி கத்தி, மற்றவர்களை திட்டியும் காமெடி செய்து வந்தபோது வித்தியாசமான உடல்மொழிகள் மூலமாக ரசிகர்களை சிரிக்க வைத்தவர்தான் ஜனகராஜ்.

கவுண்டமணி பீக்கில் இருந்தபோதும் அவருக்கு போட்டியாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். இவரின் சிறப்பம்சம் என்னவெனில் காமெடி மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடத்திலும் சிறப்பான நடிப்பை கொடுப்பார். அதனால்தான் ரஜினி, கமல் இருவரும் இவரது தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

இதையும் படிங்க: ‘துப்பறிவாளன்’ படம் விஷாலுக்கு எழுதுனதே இல்ல! முதலில் யார் நடிக்க இருந்தார் தெரியுமா? மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

அதேபோல், இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாலச்சந்தரின் படங்களில் அற்புதமான வேடங்களில் ஜனகராஜ் நடித்திருந்தார். சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள். நாயகன், ரோஜா ஆகிய படங்களில் ஜனகராஜ் அசத்தி இருப்பார். அதிலும் நாயகன் படத்தில் கமலின் நண்பராக காலத்திற்கும் மறக்க முடியாத நடிப்பை கொடுத்திருப்பார்.

ரஜினியுடன் பாட்ஷா, அண்ணாமலை, ராஜாதி ராஜா என பல படங்களிலும் ஜனகராஜ் நடித்திருந்தார். கமல்ஹாசன் இவரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். கமலின் ஒரு கைதியின் டைரி, நாயகன், குணா ஆகிய படங்களில் ஜனகராஜுக்கு முக்கிய வேடங்கள் கிடைத்தது. கமல் சொந்தமாக தயாரித்து நடித்த திரைப்படம்தான் விக்ரம். இந்த படம் 1986ம் வருடம் வெளியானது.

இதையும் படிங்க: இளையராஜா போடுறது வேஷம்!.. அது யாருக்கும் புரியாது!.. உண்மைகளை உடைக்கும் பிரபலம்..

இந்த படத்திலும் ஜனகராஜ் நடித்திருந்தார். இந்த படத்தின் பெரும்பலான காட்சிகள் ராஜஸ்தான் பாலைவனத்தில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் ஜனகராஜ் பேசியிருந்தார். பொதுவாக வெளி மாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பகுதிகளில் நடிக்கும் போது சாப்பாடு சரியாக கிடைக்காது. தாமதமாகும். நாம் விரும்பும் சாப்பாடும் கிடைக்கது.

vikram

ஆனால், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தபோது கமல் நல்ல சாப்பாடு போட்டார். அந்த படத்தில் நிறைய ஹிந்தி நடிகர், நடிகைகள் நடித்தனர். எனவே, எல்லோருக்கும் பிடித்தமாதிரி சாப்பாடு போட்டார் கமல். அதை என்னால் மறக்கவே முடியாது’ என நெகிழ்ந்து பேசி இருக்கிறார் ஜனகராஜ்.

 

Related Articles

Next Story