ரோலெக்ஸ்க்கே ரோலெக்ஸா? மாஸ் காட்டுறாரே கமல்.. சூர்யாவுக்கு கிடைத்த சூப்பர் பரிசு!

by Saranya M |   ( Updated:2022-06-08 10:29:54  )
suriya
X

விக்ரம் வெற்றியால் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுள்ள கமல் படத்தில் பணியாற்றிய பலருக்கும் பரிசுகளை வழங்கி வருகிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு கார் பரிசளித்து அவருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் செய்திருந்தார். மேலும், லோகேஷ் கனகராஜின் உதவியாளர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்து மாஸ் காட்டிய உலகநாயகன் தற்போது ரோலெக்ஸ் சூர்யாவுக்கே ரோலெக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கி உள்ளார்.

rolex watch

உலகநாயகன் கமல் நடிப்பு நாயகன் சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சை கையில் மாட்டிவிடும் புகைப்படத்தையும், உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படத்தையும் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விக்ரம் 3ம் பாகத்தை ஆரம்பித்து கமல் மற்றும் சூர்யாவுக்கு ஒரு வெறித்தனமான ஃபேஸ் ஆஃப்பை வைங்க லோகேஷ் கனகராஜ் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story