
Cinema News
80 லட்சம் கார், 45 லட்சம் வாட்ச், 1.5 லட்சம் பைக்… இதெல்லாம் கமல் செஞ்சதில்லையே.! பின்னணி இதுதானாம்.!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசாகி வசூல் பேயாட்டம் ஆடி வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் என பலர் நடித்திருக்கின்றனர்.
அனைவரும் நடித்திருந்தாலும் இறுதிக்காட்சியில் ரோலஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து பலரையும் மிரட்டிவிட்டார் என்றே கூறவேண்டும். இதன் காரணமாகவே அவருக்கு 45 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.
அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்திருந்தார். உதவி இயக்குனர்களுக்கு 13 அப்பாச்சி பைக்குகளை பரிசளித்து இருந்தார். அந்த பைக் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் கமல்ஹாசன் இப்படி யாருக்கும் பரிசுகளை வாரி வழங்கியது இல்லை. அப்படியிருக்க விக்ரம் படதிற்கு மட்டும் ஏன் இப்படி பரிசுகளை வாரி வழங்குகிறார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
அதற்கு பதில் அளித்த சினிமா வாசிகள், இதற்கு முன்னர் கமல்ஹாசன் திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்ததே கிடையாது. அவரது திரைப்படம் டெக்னாலஜிகாகவும் கதைகளதிற்காகவும் பாராட்டபடுமே தவிர, வசூலில் பெரிய அளவில் சாதித்து கிடையாது.
இதையும் படியுங்களேன் – இதுல கூடவா விளம்பரம்.? நயன்தாரா – விக்னேஷ் சிவனை நொந்து கொண்ட பிரபலங்கள்.!
கடைசியாக அவர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் என்றால் அது தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் திரைப்படம் மட்டுமே. மற்றபடி எந்த திரைப்படமும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது இல்லை. அதன் காரணமாகவே இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததற்கு கமல்ஹாசன் பலருக்கும் பரிசுகளை வழங்கி வருகிறாராம். இன்னும் யார் யாருக்கெல்லாம் பரிசு வழங்குவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.