மீண்டும் அமெரிக்கா போகும் கமல்!. ஆனா இது விசயமே வேற!…

by சிவா |   ( Updated:2025-04-21 09:01:39  )
kamal
X

திரையுலகில் சகலகலா வல்லவனாக இருப்பவர் கமல்ஹாசன். 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவில் 65 வருடஅனுபமுடையவர் இவர். குழந்தை நட்சத்திரம், நடிகர், கதாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். இப்போதும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வருகிறார்.

இதுபோக சில வருடங்களுக்கு முன்பு அரசியலிலும் களம் இறங்கினார் கமல். மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் இவரின் கட்சி போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த கட்சி பெறவில்லை. எனவே, அரசியல் செயல்பாடுகளை கமல் குறைத்துகொண்டார்.

2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றபின் தமிழக அரசோடு இணக்கம் காட்டி வருகிறார். ஒருபக்கம், சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது போன்ற விஷயங்களையும் செய்தார். கமலுக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் உண்டு. கற்றுக்கொண்டு அதை தமிழ் சினிமாவில் நடை,முறைப்படுத்த வேண்டும் என ஆசைப்படுவார்.

kamal
kamal

ஹாலிவுட்டில் வரும் புதிய கேமராக்கள், தொழில்நுட்பங்கள் என எல்லாவற்றையும் அங்கு போய் தெரிந்துகொண்டு வந்து கோலிவுட்டில் அறிமுகம் செய்து வருகிறார். இப்போதுதான் ஒடிடி என்பது பிரபலமாக இருக்கிறது. ஆனால், 12 வருடங்களுக்கு முன்பே விஸ்வரூபம் படம் ரிலீஸின்போது அதை கொண்டுவந்தார் கமல். ஆனால், தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை கைவிட்டார். அதேநேரம், இப்போது தடுத்தாலும் பின்னால் இந்த வளர்ச்சியை தடுக்க முடியாது என சொன்னார் கமல். அதுதான் நடந்தது.

இப்போது திரைப்படங்களின் முக்கிய வியாபாரமாக ஓடிடி இருக்கிறது. சமீபத்தில் கூட அமெரிக்கா போன கமல் சில மாதங்கள் அங்கு தங்கி ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார் கமல், ஆனால், இந்த முறை தமிழக அரசே அவரை அங்கு அனுப்பவிருக்கிறது.

திருமழிசை பகுதியில் ஒரு திரைப்பட நகரை கட்ட திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு. இதில் தலைமை பொறுப்பை கமலுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கமலின் அறிவுரைப்படி நடந்தால் இது ஒரு தரமான திரைப்பட நகரமாக உருவாகும் என அரசு நம்புகிறது. அதற்காகத்தான் விரைவில் அமெரிக்கா செல்லும் கமல் அங்கு இதுபற்றி புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வந்து இங்கு அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

Next Story