அடுத்த பட பட்ஜெட் இவ்வளவு கோடியா!.. மாஸ்டர் ஸ்கெட்ச் போடும் கமல்ஹாசன்!…

by சிவா |   ( Updated:2025-04-18 00:31:43  )
kamal anbarivu
X

kamal anbarivu

Kamalhaasan: 4 வருடங்களாக சினிமாவுக்கு இடைவெளி விட்ட கமல் லோகேஷுடன் கை கோர்த்து விக்ரம் படத்தை கொடுத்து நானும் ரேஸில் இருக்கிறேன் என காட்டினார். இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. எனவே, மீண்டும் சினிமாவில் பிஸியானார் கமல்.

இந்தியன் 2, கல்கி, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப், சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து படங்களை புக் செய்தார். லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களை ஏமாற்றியது. எனவே, இந்தியன் 3 படத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம், தக் லைப் படத்தில் கமல் நடித்து முடித்தார்.

இந்த படம் வருகிற ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. தக் லைப் படத்தில் நடித்து முடித்துவிட்டு அமெரிக்கா போனார் கமல், சமீபகாலமாக ஏ.ஐ தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தபட்டு வருவதால் இதுபற்றி படிக்கவே அவர் அமெரிக்கா போனதாக சொல்லப்பட்டது.

kamal
kamal

அதோடு, சினிமா தொடர்பான பல புதிய தொழில்நுட்ப விஷயங்களையும் கமல் அங்கு கற்றுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். கமலின் அடுத்த படத்தை சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு - அறிவு இயக்கவுள்ளனர். இது ஒரு பக்கா ஆக்சன் படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

சுமார் 250 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுவாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் தனியாக படங்களை தயாரிக்க மாட்டார்கள். தங்களோடு வேறு ஒரு நிறுவனத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். எனவே, இந்த படத்திற்காக லைக்காவை தங்களோடு சேர்த்துக்கொள்ளலாம் என கமல் நினைக்கிறாராம்.

இந்தியன் 3 படம் தொடர்பான முடிவெடுக்க விரைவில் சென்னை வரவிருக்கிறார். லைக்கா சுபாஷ்கரன். அப்போது கமல் அவரை சந்தித்து இதுபற்றி பேச முடிவெடுத்திருக்கிறாராம். கமல் கேட்பதை லைக்கா சுபாஷ்கரன் ஏற்றுக்கொள்வாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

Next Story