கல்கி 2898 AD-க்கு வந்த சிக்கல்!.. உதயநிதியை காட்டிய கமல்!.. என்ன நடக்கப் போகுதோ!..

Kalki 2898 AD: ஒரு திரைப்படத்தை உருவாக்குவது முக்கியமில்லை. அப்படத்தை சரியாக திட்டமிட்டு வியாபாரம் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். சரியான வினியோகஸ்தர்களிடம் படத்தை கொடுத்து தியேட்டர்களில் திரையிட வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும்.

அதேபோல், பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் படங்கள் எனில் இதில் பல பிரச்சனைகள் வரும். அனைத்தையும் சமாளித்து வியாபாரம் செய்ய தெரிந்திருக்க வேண்டு. சமீபகாலமாகவே பெரிய நடிகர்களின் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பேன் இண்டியா படங்களாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: ரஜினியை பந்தயமா வச்சு ரேஸில் குதிக்க போகும் தயாரிப்பு நிறுவனங்கள்! தலைவர் கைவசம் இத்தனை படங்களா?

பாகுபலி படத்தில் துவங்கியது அதன்பின் புஷ்பா, ஜெயிலர், வாத்தி, மாவீரன், வாரிசு, பிரின்ஸ் என தொடர்ந்து பேன் இண்டியா படங்கள் உருவாகி வருகிறது. எனவே, பட்ஜெட்டும் அதிகரித்துவிட்டது. பல நூறு கோடிகளை போட்டு படங்களை உருவாக்கி வருகிறார். அப்படி பிரபாஸின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பத்தானி என பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாகம் வருகிற ஜூன் 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விரும்பிய சில வினியோகஸ்தர்கள் பட நிறுவனத்தை அணுகியுள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினியை பந்தயமா வச்சு ரேஸில் குதிக்க போகும் தயாரிப்பு நிறுவனங்கள்! தலைவர் கைவசம் இத்தனை படங்களா?

ஆனால், படம் 720 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதை காரணம் காட்டி முன் பணமாக ஒரு பெரும் தொகையை கொடுக்க வேண்டும் என சொல்லிவுட்டது தயாரிப்பு நிறுவனம். அதேநேரம், கல்கி 2898 படத்தை வினியோகம் செய்ய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் ஆசைப்படுகிறது. கமலும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கே படத்தை கொடுத்துவிடுங்கள் என ரெக்கமண்ட் செய்திருக்கிறாராம்.

ஆனால், அட்வான்ஸ் கொடுப்பது அவர்களின் லிஸ்ட்டிலேயே கிடையாது. எனவே, தயாரிப்பு நிறுவனம் என்ன செய்யப்போகிறது?. கல்கி படம் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Related Articles

Next Story