Connect with us
thevar magan

Cinema History

தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..

Kamal and sivaji: நடிகர் கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம் தேவர் மகன். 1992ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருந்தார். மேலும், கவுதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பரம்பரை பகை காரணமாக சிவாஜியின் குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் நாசரிடமிருந்து குடும்பத்தையும், அந்த ஊரையும் கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் அப்படத்தின் கதை.

சாதி பெருமை பேசினால் கலவரம்தான் நடக்கும்.. அப்பாவி உயிர்கள் பலியாகும்.. அன்பும் மனிதநேயமுமே முக்கியம் என பொறுமை காக்கும் கமல்ஹாசன் நாசரின் அடாவடித்தனத்தை பொறுத்து கொள்ளமுடியாமல் அவரையே கொல்வதுதான் படத்தின் இறுதிக்காட்சி. அதேபோல், செய்த தவறை கமலே நினைத்து வருத்தப்படுவது போலவும் ‘புள்ளகுட்டிங்கள போய் படிக்க வைங்கடா’ என சொல்லிவிட்டு ஜெயிலுக்கு போவது போல் படம் முடியும்.

இதையும் படிங்க: லைட்டா பட்டி டிங்கரிங்!.. அந்த படத்தின் தழுவல்தான் தேவர் மகன்!.. அட ஆமால்ல!..

இந்த படத்தில் சிவாஜியின் வேடம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஊர் பெரியவர்.. அவரின் பேச்சுக்கு ஊரே கட்டுப்படுவது போல் காட்சிகள் வரும். ஒரு கட்டத்தில் அவர் இறந்து போகவே அவர் இடத்தில் கமல் அமர்ந்து அவர் ஊருக்கு செய்ததை கமல் செய்வார் என்பதுதான் திரைக்கதை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கமல் இப்படம் பற்றிய பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த படத்தில் சிவாஜி சார் அமர்ந்திருப்பதற்கு ஒரு நாற்காலி தேவைப்பட்டது. கொண்டு வந்த நாற்காலி எல்லாமே சுமாராக இருந்தது. துணியில் கட்டப்பட்ட நாற்காலி கூட வந்தது. எனக்கு அதில் திருப்தியில்லை. எனவே, நல்ல நாற்காலிக்காக காத்திருந்தேன்.

இதையும் படிங்க: கொஞ்ச நஞ்ச பேச்சா? சத்தமே இல்லாமல் 21 வருடங்கள் கடந்து ‘தேவர் மகன்’ படம் செய்த சாதனை!

இதனால் காட்சிகளை எடுக்காமல் சிவாஜி சாரும் காத்திருந்தார். இதில் கோபமடைந்த அவர் ‘ஒரு சேருக்காக ஒன்றரை மணி நேரம் காத்திருக்கான்’ என என்னை திட்டினார். அதன்பின் எனக்கு பிடித்தது போல் ஒரு சேர் வந்தது. அதில் அவரை வைத்து காட்சிகள் எடுத்தோம்.

டப்பிங் பேச வந்த அவர் இதற்கு பின் என்ன நடக்கிறது என கேட்டார். எடுத்த காட்சிகளை போட்டு காட்டினேன். அதில், அவரின் மறைவுக்கு பின் அந்த நாற்காலியில் நான் அமர்வது போல் காட்சி வரும். அதைப்பார்த்த அவர் ‘டேய். நான் உட்கார நீ சேர் தேடல. நீ உட்கார சேர் பாத்திருக்க.. ராஸ்கல்’ என செல்லமாக திட்டினார். ஆனால், அவரின் இடத்தில் நான் அமர்வதை அவர் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டார்’ என கமல் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பை பார்த்து கடுப்பான இயக்குனர்! ‘தேவர்மகன்’ படத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கா?

google news
Continue Reading

More in Cinema History

To Top