பாசத்துல டி.ராஜேந்தரை ஓவர்டேக் பண்றார் சிம்பு!.. கமலே ஃபீல் பண்ணி பேசிட்டாரே!….

Thug Life: மணிரத்னம் இயக்கத்தில் 36 வருடங்களுக்கு பின் கமல் நடித்திருக்கும் திரைப்படம் தக் லைப். இந்த படத்தின் அறிவிப்பு ஒரு புரமோஷன் வீடியோவோடு வெளியானபோது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ’தக்’ என்றால் என்ன என பலரும் இணையத்தில் தேட துவங்கிவிட்டனர்.
அதன்பின் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அவர்களுக்கு பதில் சிம்புவும், அசோக் செல்வனும் நடிப்பது உறுதியானது. கமலோடு சிம்பு இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. வழக்கம்போல் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தக் லைப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் என பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய சிம்பு ‘கமல் சார் என்னுடைஉய ஆன் ஸ்கிரீன் குருவாக நினைக்கிறேன். இந்த படத்தில் புதிதாக நிறைய விஷயங்கள் நடந்திருக்கிறது. கமல் சார் கூட நடிச்சது எனக்கு பெருமை. படத்தை பற்றி நிறைய பேச முடியாது. தனியாக கமல் சார் கூட நடிக்கிறது கஷ்டம். இதுல மணி சாரும் இருக்காரு. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்னு நினைக்குறேன். இந்த படத்தில் கமல் சார் சூப்பரா நடனமாடியிருக்கிறார்’ என சொல்லியிருக்கிறார்.
கமல் பேசும்போது ‘சிம்புவோட ராட்சசா எனர்ஜிக்கு ஈடு கொடுக்கணும்னுதான் நானும் அப்படி ஆடினேன். என் மீது பாசம் வைப்பதில் தந்தை டி.ராஜேந்தரை மிஞ்சிவிட்டார் சிம்பு. டி.ராஜேந்தருக்கு என் மீது அதிகப்படியான பாசம் உள்ளது. எனக்கு எதாவது பிரச்சனை என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது சட்டையை நனைத்துவிடுகிறார்’ என பேசினார்.