கமல் மானத்தை வாங்கிய காமெடி பிரபலம்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் அவமானப்பட்ட ஆண்டவர்.!
உலக நாயகன் கமல்ஹாசன், இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த இயக்குனர், திரைக்கதையாசிரியர், கதாசிரியர் என்று பல்வேறு சினிமா துறைகளில் தனது முத்திரையை பதித்து வருகிறார். சிறந்த படங்களை தனது நிறுவனம் மூலம் வேறு ஹீரோவை வைத்து தயாரிக்கவும் தயங்கியது இல்லை.
இவர் எழுதி சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி 1989வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். திரைப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் வில்லனாக நாகேஷ் நடித்திருந்தார்.
நாகேஷ் அதற்கு முன்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் சூப்பர் காமெடியனாக வலம் வந்தவர். இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அப்போது அவருடன் நடந்த சம்பவத்தை கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் வெளிக்கொணர்ந்தார்.
தானும், வசனகர்த்தா கிரேஸி மோகனும் அற்புதமான வசனங்கள் எழுதி விட்டோம் என நினைத்திருந்தோம், ஆனால் ஒரே வசனத்தில் செட்டில் எங்கள் மானத்தை வாங்கி விட்டார் நாகேஷ்.
இதையும் படியுங்களேன் - நான் தாண்டா ஒரிஜினல் டான்.! வெறித்தனமாக காம்பேக் கொடுக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்.! விவரம் இதோ..
அதாவது, குள்ளமாக இருக்கும் கமல்ஹாசனை அடியாட்கள் தூக்கி வந்து விடுவார்கள். அப்போது அந்த குள்ளன் கமல்ஹாசனை பார்த்த நாகேஷ், மேலும் கீழும் பார்த்து விட்டு, 'மீதி எங்கேடா' என்று கேட்டுவிடுவாராம். ஆனால் அது டயலாக் பேப்பரில் இல்லை. இதனை பார்த்த கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகன் வாயடைத்துப் போய் விட்டார்காம்.
உடனே அடியாட்களுக்கு டயலாக் வைத்து, 'பாஸ் இவ்வளவு தான் இருந்தது.' என்று கூறும்படி மாற்றினார்களாம் கமல் மற்றும் கிரேஸி மோகன். அப்படியே அந்த காட்சியை முடித்தோம் .என்று அபூர்வ சகோதரர்கள் ஷூட்டிங் சமயத்தில் நாகேஷ் உடனான அனுபவத்தை வெளிப்படையாக கூறினார் உலகநாயகன் கமல்ஹாசன்.