அவரையா அசிங்கப்படுத்துறீங்க!.. ஒருநாள் அவர் பின்னாடி அலைவீங்க!.. ரஜினியை அப்பவே கணித்த கமல்!…

#image_title
Rajinikanth: ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானபோது கமல் பிரபலமான நடிகராகவும் ஸ்டாராகவும் இருந்தார். கமல் 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர். டீன் ஏஜை எட்டிய பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பாலச்சந்தர் இயக்கும் படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
சென்னை திரைப்படக்கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றபோது ரஜினியை பார்த்தார் பாலச்சந்தர். ரஜினியின் முகமும், கண்களும் அவரை என்னவோ செய்தது. எனவே, கமலை வைத்து தான் இயக்கி வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஒரு சின்ன வேடம் கொடுத்தார். அப்போது ரஜினிக்கு சரியாக தமிழ் பேசக்கூட தெரியாது.
ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்தார் பாலச்சந்தர். அதோடு ‘இந்த படத்தில் சின்ன வேடம் என வருத்தப்படாதே!. அடுத்தடுத்து நான் இயக்கும் 3 படங்களில் உனக்கு நல்ல வேடம் கொடுக்கிறேன்’ என ரஜினியிடம் சொன்னார் பாலச்சந்தர். சொன்னபடியே செய்தார். அந்த படங்களில் எல்லாம் கமலின் நண்பராக ரஜினி நடித்தார்.

சினிமாவில் ஹீரோவுக்கு கிடைப்பது சின்ன நடிகர்களுக்கு கிடைக்காது. ஹீரோக்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுப்பதோடு, ஜீஸ், இளநீர், ஸ்னாக்ஸ், ஸ்டார் ஹோட்டலில் இருந்து உணவு என எல்லாம் கிடைக்கும். சின்ன நடிகர்களை கண்டு கொள்ளமாட்டார்கள். ஷூட்டிங்கில் கமலுக்கு கிடைக்கும் எதுவும் ரஜினிக்கு கிடைக்காது.
பாரதிராஜா இயக்கத்தில் பதினாறு வயதினிலே படம் உருவானபோது கமலுக்கு சம்பளம் 15 ஆயிரம். ஸ்ரீதேவிகு 10 ஆயிரம், ரஜினிக்கு 2500 மட்டுமே. அதிலும் 500 ரூபாயை பாரதிராஜா கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் ரஜினியை பற்றி கமல் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
16 வயதினிலே படம் உருவான போது ரஜினி ஸ்டார் இல்லை. சினிமாவுக்கு வந்த புதுசு.. செட்ல அவர் தனியா இருப்பார். யாரும் அவரை கண்டுகொள்ளவே மாட்டார்கள். தனியா ஒரு மரத்தடியில் போய் சாப்பிடுவாரு. நான் கூப்பிட்டாலும் வரமாட்டாரு.. காலையில் அவருக்கு மேக்கப் போட்டு ஒருநாள் ஃபுல்லா உட்கார வைத்து கடைசி ஷாட் அவரை வச்சி எடுப்பாங்க.. அப்ப நான் சொல்வேன்.. யோவ் நீங்க வேணா பாருங்க.. ஒருநாள் இந்த தமிழ் சினிமால மொத்த பேரும் அந்தாளு கால்ஷீட் கேட்டு அலைய போறீங்கன்னு.. அது அப்படியே நடந்துச்சி’ என பேசியிருக்கிறார்.