ஹீரோ முதல் இயக்குனர்கள் வரை.. எந்த ஏரியாவாக இருந்தாலும் இவங்க டாப் தான்... எம்.ஜி.ஆர், கமல் முதல் சிம்பு, தனுஷ் வரையில்...
தமிழ் சினிமாவில் அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவர்கள் வெகு சிலரே. நடிக்க தெரிந்தவர்களுக்கு, இசையமைக்க தெரியாது. இசையமைக்க தெரிந்தவர்களுக்கு படம் இயக்க தெரியாது. நடனம் ஆடுவபவர்களுக்கு ஒளிப்பதிவு தெரியாது. அதையும் மீறி தமிழ் சினிமாவில் இயக்கத்தில் ஜொலித்த தமிழ் ஹீரோக்கள் லிஸ்ட் தான் இப்போது கிழே பார்க்கப்போகிறோம்.
எம்.ஜி.ஆர் - தமிழ் மாஸ் ஹீரோக்களின் முன்னோடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் , நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் - இவரை பற்றி பேசாமல் தமிழ் சினிமாவினை தொடங்க முடியாது என்றே கூறலாம். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் இவர் எழுத்தில் உருவானவை. மற்ற இயக்குனரால் தான் சொல்வதினை எடுக்க முடியாது என்ற நிலையில் தானே இயக்க ஆரம்பித்து விடுவார்.
அப்படி தான், கமல் இயக்கத்தில் சாக்ஷி 420 (அவ்வை சண்முகி ஹிந்தி பதிப்பு), ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை கமல்ஹாசனே எழுதி இயக்கி இருக்கிறார்.
ராஜ்கிரண் - சினிமா விநியோகிஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து என் ராசாவின் மனசிலே படம் மூலம் ஹீரோ ஆனார். அதன் பின்னர் அரண்மனை கிளி மூலம் இயக்குனராக ஜொலித்தார். எல்லாமே என் ராசாதான் எனும் படத்திலும் இயக்குனராக மிளிர்ந்தார்.
இதையும் படியுங்களேன் - என்னடா ரவுடி ஹீரோவுக்கு வந்த புது பிரச்சனை... லைகர்-ஐ கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்.. டிவிட்டர் விமர்சனம் இதோ...
சத்யராஜ் - இந்த லிஸ்டில் இவர் பெயரை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். வில்லாதி வில்லன் எனும் படம் மூலம் இயக்குனராக மாறினார். இதில் 3 வேடத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இயக்குவதை விட்டுவிட்டார்.
சிம்பு - டி.ஆர் மகனாக இருந்து இவர் படம் இயக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம். மன்மதன் எனும் படத்தில் கதை,திரைக்கதை எழுதி, வல்லவன் படத்தில் இயக்குனராக மாறினார்.
இதையும் படியுங்களேன் - நாங்க என்ன கேட்டோம்.? நீங்க என்ன செய்றீங்க.? சிம்புவை நொந்து கொண்ட ரசிகர்கள்... விவரம் இதோ...
தனுஷ் - இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி இந்த தகுதி போதாதா இவர் எழுதி இயக்குவதற்கு. ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து பா.பாண்டி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். மற்ற ஹீரோக்கள் அவரவர் படங்களைத்தான் இயக்கி கொண்டார்கள். ஆனால், தனுஷ் , ராஜ்கிரண் போன்ற மூத்த நடிகரை சம காலத்தில் ஹீரோவாக்கி, இயக்குனராகவும் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லிஸ்டில் விட்டு போன , டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் , பார்த்திபன் ஆகியோர் இயக்குனர்களாக பணியாற்ற போராடி , சந்தர்ப்ப சூழ்நிலையில் நடிகராகி, மீண்டும் முழு நேர இயக்கத்தை தொடர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.