Connect with us

Cinema News

ஏன் தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் வழங்கப்படுவதில்லை.! அன்றே கணித்த ஆண்டவர்.!

இன்று சினிமா செய்திகள் மட்டுமல்ல பல சேனல்களில் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் , இசை என நமக்கு தெரிந்த துறைகள் சில மற்றும் நமக்கு தெரியாத துறைகள் பலவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த விருது வழங்கும் விழாவை இந்திய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் வருடா வருடம் பார்ப்பார்கள் நமது திரைப்படத்திற்கும் இந்த மாதிரி ஆஸ்கர் கிடைக்குமா என்று. ஆனால் அது வருடா வருடம் ஏமாற்றம் தொடர்கதையாகவே பெரும்பாலும் இருந்துள்ளது.

இதற்கு காரணம் நமது படைப்பாளிகள் அந்தளவுக்கு திறமையில்லை என்பதில்லை. நமது கலாச்சாரம் , வேறு அதனை நாம் காட்டும் விதம் வேறு. இதனை உலகநாயகன் கமல்ஹாசன் அருமையாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருப்பார்.

இதையும் படியுங்களேன் – இப்படி மாட்டிக்கிட்டிங்களே கிர்த்தி ஷெட்டி.?! இனி என்னவாக போகுதே தெரியலேயே.!

அதாவது, ‘ நமது கலாச்சாரத்தை மையப்படுத்தி நமது திரைப்படம் எடுப்போம். ஆனால், அது , அமெரிக்க ஆஸ்கர் குழு வுடன் ஒத்துப்போகாது. நமது உணர்ச்சிகளை நாம் அப்படியே படம்பிபோம். அழுகை, கோபம் உள்ளிட்டவையை. ஆனால, அது அந்த குழுவுக்கு ஓவர் ஆக்டிங் செய்வது போல தெரிந்துவிடும். ஆனால், உண்மையில் நாம் இப்படித்தான் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் நமது  சினிமாக்களுக்கு ஆஸ்கர் கிடைப்பது கடினமாக இருக்கிறது. ‘ என தெளிவான பதிலை அளித்திருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top