
Cinema News
இப்படி செய்யலாமா நீங்க.? அடம்பிடிக்கும் கமல்.! விழிபிதுங்கி நிற்கும் ‘விக்ரம்’ படக்குழு.!
தமிழ் சினிமா அடுத்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது விக்ரம் தான். கிட்டத்தட்ட அது தான் தமிழ் சினிமாவில் மிக பெரிய தற்போதைய நம்பிக்கை. தமிழ் சினிமாவும் பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில் கடைசியாக வெளியான எந்த படமும் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
அதனால், கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இந்த விக்ரம் படத்தை கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தான் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வாங்கி வெளியிடுகிறார்
இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் அன்றைய தினத்தை ரசிகர்கர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். விக்ரம் படத்திற்கு அனிருத் இசை என்பதால் ரசிகர்கள் பாடல்களை மிகவும் எதிர்பார்க்கின்றனர்.
இப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் வருவார்கள் என்பதால், பெரிய ஸ்டேடியத்தை இதற்காக புக் செய்யலாம் என படக்குழு தீர்மானித்து அதற்கான வேலைகளில் விழா ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு கமல்ஹாசனே முட்டுக்கட்டையாக இருக்கிறாராம்.
இதையும் படியுங்களேன் – என்னை மன்னிச்சிருங்க சார்.! அரசியல் பிரபலத்திடம் சரண்டர் ஆன சிவகார்த்திகேயன்.!
ஆம், கமலஹாசன் இந்த பட பாடலை கேட்டவுடன், இதனை நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் ஓர் அரங்கில் அதாவது சத்யம் அரங்கம் போன்ற அரங்கத்தில் ரசிகர்கள் கேட்டால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளாராம். ஆனால், அப்படியான அரங்கங்கள் மிகவும் சிறியது. அதில் ரசிகர்களை கொண்டு வர முடியாது. கூட்டத்தை அங்கு சமாளிக்கவும் முடியாது என விழிபிதுங்கி நிக்கின்றனராம் விழா ஏற்பாட்டாளர்கள்.
விரைவில், விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு எங்கு நடக்கும் என்ற அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.