அடிச்சான் பாரு கமல்ஹாசன் ஒரே அடி.. அவன் தான் நம்பர் 1.! உணர்ச்சிவசப்பட்ட சர்ச்சை நடிகர்...

by Manikandan |
அடிச்சான் பாரு கமல்ஹாசன் ஒரே அடி.. அவன் தான் நம்பர் 1.! உணர்ச்சிவசப்பட்ட சர்ச்சை நடிகர்...
X

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக கிட்டத்தட்ட 48 வருடங்களாக வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம், படத்தில் மிகவும் முக்கியமான வேடம் என தனது திறமையான நடிப்பின் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளார் நடிகர் ராதாரவி.

அது மட்டுமல்லாமல் தற்போது யூ-டியூப் உலகத்திற்கு மிகுந்த பரிச்சயமான ஆளாக இவர் இருக்கிறார். இவர் சினிமா மேடைகளில் பேசும் பேச்சுகள் அன்றைய தினம் இணையதளத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அந்த அளவுக்கு தனக்கு மனதில் தோன்றியதை அது சர்ச்சையாக மாறினாலும் பரவாயில்லை என்று பேசி விடுகிறார்.

அப்படித்தான் அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி ராதாரவி ஒரு மேடையில் பேசியுள்ளார். அதாவது கமல்ஹாசன் மிகவும் திறமைசாலி. தற்போது சின்ன சின்ன திறமையான பசங்களை வைத்துக்கொண்டு, தனது சிறப்பான நடிப்பின் மூலம் தற்போது ஒரே அடியாக விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டான். தன் படம் நம்பர் ஒன் என்பதை நிரூபித்து விட்டான். என்று மிகவும் பெருமையாக தனது திரையுலக நண்பன் கமல்ஹாசன் பற்றி ராதாரவி குறிப்பிட்டு இருக்கிறார்.

vikram

இதையும் படியுங்களேன் - மாமாவது மாப்பிள்ளையாவது ஏறி மிதிச்சிட்டு போயிருவேன்.. கொந்தளித்த 'யானை' ஹரி..

உண்மையில் வசூலில் தற்போதைக்கு விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என பலர் நடித்து இந்த திரைப்படம் வெளியாகி தற்போது 450 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து வருகிறது.

Next Story