கடந்த மாதம் 3ஆம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வரும் திரைப்படம் என்றால் அது விக்ரம் திரைப்படம் தான்.
இந்த திரைப்படம் 450 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக பல படங்கள் இடையில் வந்தாலும் இன்னும் வசூல் குவித்து வருகிறது. இப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி உடன் 25வது நாளை நிறைவு செய்தது. 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போதும் 150 திரையரங்குகளுக்கு குறையாமல் ஓடி கொண்டிருக்கிறது.
இப்படத்தின் பட்ஜெட் 120 கோடி, விளம்பரம் 8கோடி , விநியோகிஸ்தம் செலவு 2 கோடி, வட்டி 20 கோடி என மொத்த பட்ஜெட் 150 கோடியாம். அதில் ஹீரோ , மற்ற நடிகர்களின் சம்பளம் மட்டுமே 80 கோடி ஆகிவிட்டதாம். மீதம் உள்ள 40 கோடியில் தான் படமே எடுக்கப்பட்டதாம்.
இப்படம் ரிலீசுக்கு முன்பே 204 கோடிக்கு பிசினஸ் ஆகி சுமார் 55 கோடி நிகர லாபமாக கமலுக்கு கிடைத்ததாம். அதன் பிறகு அவரே எதிர்ப்பார்க்காத வசூல் மழையை விக்ரம் நிகழ்த்தியதியுள்ளது என்றே புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இப்படத்தை கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் அங்குள்ள விநியோகிஸ்தர் உதவியுடன் கமலே ரிலீஸ் செய்தாராம். அப்படி தான் ரெட் ஜெயண்ட் மூலமாக தமிழகத்தில் கமல் ரிலீஸ் செய்தாராம். இதுவரை தமிழகத்தில் மட்டுமே 173 கோடி வரை வசூல் ஆகியுள்ளதாம். இதுவரை வெளியான படஙக்ளில் இதுதான் அதிகமாம்.
முதல் நாள் 25 கோடி, முதல் வாரம் 92 கோடி, இரண்டாம் வாரம் 50 கோடி, மூன்றாம் வாரம் 21 கோடி மேலும் இன்னும் இந்த வாரம் முடிந்தால் 7 கோடி வரை தாராளமாக வசூல் வரும். அப்படி வந்தால் 180 கோடி தமிழக வசூல் எனும் இமாலய மைல்கல்லை இப்படம் படைத்துவிடும் என்கிறார்கள் சினிமாவாசிகள்.
இதையும் படியுங்களேன் – திருப்பதி ஏழுமலையானுக்கு போட்டியாக குவிய போகும் கூட்டம்… புஷ்பாவின் மெகா அதிரடி அறிவிப்பு…
கமல் எதிர்பார்த்தது தமிழக ஷேர் வெறும் 35 கோடி ஆனால் கிடைத்த ஷேர் 88 கோடியாம். ரிலீஸ் செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு 7 கோடி லாபம் மட்டும் கிடைத்ததாம். வெளிநாடுகளில் 42 கோடி வரை லாபம் கமலுக்கு கிடைத்ததாம். ஆனால் கமல் எதிர்பார்த்தது 16 கோடி தானாம். அந்த தொகையை வெளிநாட்டு நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் லாபம் 42 கோடி.
அதே போல வட இந்தியாவில் 2 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தால் 4 கோடி கிடைத்ததாம். விநியோகிஸ்தர்களுக்கு செம லாபம். கேரளாவில் விற்றது 5.50 கோடி, கிடைத்தது 20 கோடி, விளம்பரம் போக லாபம் , 12 கோடியாம். கர்நாடகாவில் 4 கோடிக்கு விற்று 21 கோடி வசூல் ஆகியதாம். ஆந்திரா, தெலுங்கானாவுக்கு 6 கோடி விற்று 26 கோடி வசூல் ஆகியுள்ளது. இந்த தகவல்களை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது வலைப்பேச்சு இணையதளத்தில் பகிர்ந்துகொண்டார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…