Connect with us

பங்கமாய் அரசியல் பேசிய ஆண்டவர்.! உதயநிதிக்கு தெரிஞ்சா கோவிச்சிக்க போறார்.!

Cinema News

பங்கமாய் அரசியல் பேசிய ஆண்டவர்.! உதயநிதிக்கு தெரிஞ்சா கோவிச்சிக்க போறார்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு ரெடியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அதனால் இந்த படத்திற்கு கமல் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே காத்து கொண்டு இருகிறது என்று கூறலாம் .

அதற்கு தீனியுட்டும் விதமாக நேற்று இப்படத்தில் இருந்து முதல் பாடல் ஆண்டவர் கமல் எழுதி அவரும் அனிருத்தும் இணைந்து பாடிய பத்தல பத்தல எனும் பாடல் வெளியானது. அது வெளியாவதற்குள் ரசிகர்கள் உயிர் போய் உயிர் வந்தது. அந்தளவுக்கு காலதாமதம் ஆக்கி விட்டனர்.

அந்த பாடல் வரிகளை கவனித்தால் பல்வேறு உள்குத்து( அரசியல் குத்து ) உள்ளது. கஜானாலே காசில்லே கல்லாலையும் காசில்லே காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே ! சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே ! என பாட்டிலேயே பலரது வயிற்றில் புளியை கரைத்துவிட்டார் ஆண்டவர் கமல்ஹாசன்.

இதையும் படியுங்களேன் – நயன்தாரா சீக்ரெட்டை பொதுவெளியில் போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்.! திருதிருவென விழித்த ‘அந்த’ சம்பவம்.!

இந்த படத்தை தமிழ்கத்தில் வாங்கி வெளியிடுவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின். உங்களுக்கே தெரியும் இது யாருடைய ஆட்சி என்று.  இருந்தும் கமல் வசைபாடியது ஒன்றியம் என கூறி மத்திய அரசை தான். இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு வரும் வீணாக ரிலீஸ் சமயத்தில் வீண் டென்ஷன் வரும்.

உதயநிதி தான் வெளியிடுவது என்பதால் பிரச்சனைகள் பூதாகரமாக வெளிப்படாது. அதனால் தியேட்டர் அதிபர்கள் கொஞ்சம் நிம்மதியில் இருப்பர்கள். இந்த பாடல் விஷயம் எல்லாம் உதயநிதிக்கு தெரிந்திருக்குமா என்பது தான் சினிமா வாசிகளின் கேள்வியாக உள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top