இன்னும் நிறைய கல்யாணம் பாக்கி இருக்கு!.. கமல்ஹாசனுக்கு நக்கல் அதிகம்!…

நடிகர் கமல்ஹாசனின் குடும்பம் பகுத்தறிவு கொண்ட குடும்பம். அவரின் அப்பா சீனிவாசன் வழக்கறிஞராக இருந்தவர். இவர்கள் பிராமண குடும்பம் என்றாலும் கடவுள் மறுப்பை கொள்கையாக கொண்டவர்கள். கமலின் அண்ணன் சாருஹாசன், சந்திரஹாசன் என இருவருக்குமே சாமி கும்பிடும் பழக்கம் இல்லை. அதனாலோ என்னவோ கமலும் அப்படியே வளர்ந்தார்.
கமல் முழுக்க முழுக்க மேல்நாட்டு பழக்கவழக்கங்களையும், சிந்தனைகளையும் கொண்டவர். இதனாலேயே அவர் பல விமர்சனங்களுக்கு ஆளானர். குறிப்பாக அவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவரை பிடிக்காதவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
கமல் முதலில் வாணி கணபதி என்கிற நடிகையை திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் நடிகை சரிகாவை காதலித்து இருவரும் பல வருடங்கள் லிவ்விங் டூ கெதர் உறவில் இருந்தார்கள். முதல் மகள் ஸ்ருதி பிறந்தபின்னர்தான் சரிகாவை கமல் முறையாக திருமணமே செய்து கொண்டார்.

கமல் - சரிகா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், 2004ம் வருடம் கமலும், சரிகாவும் பிரிந்துவிட்டனர். அதன்பின் சரிகா மும்பையில் செட்டில் ஆனார். கமல் நடிகை கவுதமியுடன் லிவ்விங் டூகெதரில் இருந்தார். கமலுக்கு எல்லாமுமாக கவுதமி இருந்தார். ஆனால், சில வருடங்களில் கவுதமியும் கமலை விட்டு பிரிந்து சென்றார்.
அதிலிருந்து இப்போதுவரை கமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். கமலுக்கு இப்போது 70 வயது ஆகிறது. ஆனாலும், சினிமாவில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விக்ரம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இப்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
தக்லைப் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல் ‘ஒருமுறை எம்.பி பிரிட்டாஸ் என்னிடம் ‘நீங்கள் பிராப்பர் பிராமணர். ராமரை வணங்கும் நீங்கள் எப்படி இரண்டு கல்யாணம் செய்து கொண்டீர்கள்?’ எனக்கேட்டார். நான் கடவுளை வணங்குவதில்லை என்பது வேறு விஷயம். பிராமணர் குடும்பத்திலிருந்து வருவதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்?. நான் ராமர் இல்லை. அவரின் அப்பா வகையறா. அப்படிப்பார்த்தா இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் கல்யாணம் பாக்கி இருக்கு’ என சொன்னேன்’ என்றார் கமல்.