Connect with us
kamal

Cinema News

லைக்காவுடன் மீண்டும் பஞ்சாயத்து! – இந்தியன் 2-வை டீலில் விட்ட உலக நாயகன்…

இந்தியன் 2 படம் துவங்கியதிலிருந்து அப்படம் பல பஞ்சாயத்துக்களை சந்தித்தது. இப்படம் துவங்கப்பட்டு 4 வருடம் ஆகிவிட்டது. இப்படம் துவங்கிய போது கமலுக்கு பேசப்பட்ட சம்பளம் 30 கோடி. பூஜையெல்லாம் போட்டு படப்பிடிப்பை துவங்கிய போது படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 2 பேர் இறந்து போனார்கள்.

இதனால் படப்பிடிப்பு சில மாதங்கள் நடக்கவில்லை. அடுத்து கொரோனா ஊரடங்கு வந்து பல மாதங்கள் படப்பிடிப்பு நின்று போனது. அதன்பின் ஷங்கருக்கும், லைக்காவும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றம் வரை போனது. அதன்பின் ஒருவழியாக அது பேசி தீர்க்கப்பட்டு இந்தியன் 2 பட வேலைகள் துவங்கியது.

indian

அதன்பின் கமலுக்கும் லைக்காவுக்கும் இடையே பிரச்சனை வந்தது. எப்படி எனில் லைக்கா தயாரிப்பில் கமல் எழுதி நடித்த சபாஷ் நாயுடு படத்திற்காக கமலுக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையை இந்தியன் 2-வுக்காக லைக்கா பயன்படுத்திகொண்டது. இதனால், சில மாதங்கள் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தார் கமல் என சொல்லப்பட்டது.

ஒருபக்கம், ஷங்கர் இப்படத்தை விட்டுவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போய் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார். லைக்காவுடன் பேச்சுவார்தை முடிந்து சில நாட்கள் இந்தியன் 2-வையும், சில நாட்கள் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கினார். ஒருபக்கம், ஒரே நேரத்தில் இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன் என 3 பெரிய படங்களை தயாரித்ததால் லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியது.

indian2

இதனால், கமல், அஜித் ஆகியோருக்கு சொன்னபடி சொன்ன தேதிக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது இந்தியன் 2 படத்தை முடித்து ஜூலை 12ம் தேதி என அறிவிக்கப்பட்டுவிட்டது. புரமோஷன் வேலையையும் துவங்கிவிட்டார்கள். சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கமல் போகவில்லை.

அதேபோல், நாளை மும்பையில் நடக்கும் டிரெய்லர் விழாவில் கமல் கலந்துகொள்ள போவதில்லையாம். கமலுக்கு சம்பள பாக்கி இருப்பதாலேயே அவர் கோபத்தில் இப்படி நடந்து கொள்கிறார் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். விக்ரம் படம் ஓடியதால் கமல் தனக்கு அதிகம் சம்பளம் கேட்டிருக்கலாம், அதில் ஏற்பட்ட பிரச்சனை எனவும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top