உடைந்து போன ராஜ்கிரணுக்கு கமல் கொடுத்த நம்பிக்கை!.. அட உலக நாயகன் சொன்னது அப்படியே நடந்துச்சே!..

Rajkiran: ஒவ்வொரு வாழ்விலும் மற்றவர்கள் கொடுக்கும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். அதுவும் திரையுலகில் சோர்ந்து போன நேரத்தில் தோல்வியை சந்திக்கும் நேரத்தில், கீழே விழுந்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்கும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் சினிமாவில் போட்டி, பொறாமை என்பது மிகவும் அதிகம்.

ஒருவர் வெற்றி பெற்றால் அவரை பார்த்து சந்தோசப்படுபவர்களை விட ஒருவர் தோற்றுப்போகும்போது மகிழ்ச்சி அடைபவர்களே திரையுலகில் அதிகம். அது போன்ற சூழலில் இருந்து மீண்டு வருபவர்களே வெற்றி பெற முடியும். இந்த அவமானங்களை பல நடிகர்களும், இயக்குனர்களும் சந்தித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..

திரையுலகில் பல வருடங்களுக்கு முன்பே வினியோகஸ்தராக இருந்து என் ராசாவின் மனசிலே படம் மூலம் தயாரிப்பாளராக மாறியவர்தான் ராஜ்கிரண். பாரதிராஜா இயக்கத்தில் பதினாறு வயதினிலே படம் உருவான போது அப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை.

அதற்கு காரணம் கமல் அப்படத்தில் கோமணம் கட்டி நடித்ததுதான். இதுபோன்ற காட்சிகளை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், படத்தின் மீது நம்பிக்கை வைத்து படத்தை வாங்கியவர் அப்போது வினியோகஸ்தராக இருந்த மொய்தீன் பாய். இவர்தான் பின்னாளில் ராஜ்கிரணாக மாறினார்.

இதையும் படிங்க: அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த தப்பு… ஓபனாக ஒப்புக்கொண்ட இயக்குனர் தரணி!…

என் ராசாவின் மனசிலே படத்தை தயாரிக்க முடிவுசெய்து ராமராஜன் பின்னால் அலைந்து அவரின் கால்ஷீட் கிடைக்காமல் ஒருகட்டத்தில் ராஜ்கிரணே ஹீரோவாக நடித்தார். இந்த படம் உருவானதும் படத்தை பார்த்த ராஜ்கிரணின் சகோதரர் ‘உங்களை ஒரு நடிகராகவே பார்க்க முடியவில்லை. ஆபிசில் இங்கேயும் அங்கேயும் நீங்கள் நடப்பது போலவே இருக்கிறது. இந்த படம் வெற்றி அடையாது’ என கூறியிருக்கிறார். ராஜ்கிரண் உடன் இருந்தவர்களும் நம்பிக்கை வார்த்தை பேசவில்லை.

En Rasavin Manasile

En Rasavin Manasile

எனவே, கமலிடம் இந்த படத்தை போட்டு காட்டி கருத்து கேட்டார் ராஜ்கிரண். படத்தை பார்த்த கமல் ‘இந்த படம் என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கு ஒரு தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான நடிகர் கிடைத்திருக்கிறார்’ என்று சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது போலவே பின்னாளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார்.

ராஜ்கிரண் மட்டுமல்ல. சத்தியராஜையும் இப்படித்தான் கமல் சொன்னார். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க சொன்னார். ஆனால், அவர் அதை கேட்கவில்லை. லொள்ளு, வில்லத்தனம் என போய்விட்டார். அதோடு, நாசர், பசுபதி போன்ற நடிகர்களிடமும் அவர்களின் திறமை புரிந்து தனது படங்களில் கமல் பயன்படுத்தி இருக்கிறார்.

 

Related Articles

Next Story