Connect with us

Cinema News

உலகநாயகன் தயாரிப்பில் சிம்பு.?! வெளியான வெறித்தமான தகவல்.! இயக்குனர் யார் தெரியுமா.?!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் தமிழ் சினிமாவில் இயங்க ஆரம்பித்துள்ளார். அவரது ராஜ் கமல் பட நிறுவனம் மூலம் அவரது படங்களை மட்டுமல்லாமல் வேறு ஹீரோ படங்களையும் தயாரிக்க ஆர்வம் காட்டிவருகிறார்.

அந்த வகையில் கமல் தயாரிப்பில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்கும் 51வது திரைப்படமாக அது அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அதற்கடுத்து 52 ஆவது திரைப்படமாக கமல்ஹாசன் நடிக்க மகேஷ் நாராயணன் இயக்கும் திரைப்படம் உருவாக உள்ளது.

அதற்கு அடுத்ததாக 54 வது திரைப்படமாக உதயநிதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தயாராகும் என கூறப்பட்டு விட்டது. அப்படி என்றால் 53வது திரைப்படம் யார் நடிக்கிறார்கள்? யார் இயக்குனர் என்றார் ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

இதையும் படியுங்களேன் – கார்த்தியை அருகில் வைத்துக்கொண்டே ஷங்கர் மகள் செய்த வேலை.. திருதிருவென விழித்த விருமன்.!

அப்படி சினிமா வட்டாரத்தில் விசாரிக்கையில், கிட்டத்தட்ட கிடைத்த தகவல் என்னவென்றால், சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதற்கான இயக்குனரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் – சிம்பு இணையும் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என பேச்சுக்கள் கோலிவுட்டில்எழுந்துள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top