Categories: latest news

ரீ-ரிலீஸில் கூட உலகநாயகன் போடுறது தனி ஸ்கெட்ச் தான்… நல்லா இருக்கே!…

Re-Release: தமிழ் சினிமாவுக்கு புது டிரெண்ட்டாகி போனது ரீ-ரிலீஸ்கள். தொடர்ச்சியாக கோலிவுட்டின் டாப் ஹிட் படங்களை ரிலீஸ் செய்து பலர் கல்லா கட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் ஒரு புது ஸ்கெட்சை போட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் 2024 தொடங்கியதில் இருந்து ஒரே சொதப்பல்கள் தான். இதுவரை ஒரு படம் கூட ஹிட் கொடுக்காமல் இருக்கின்றனர். நான்கு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் இதுவரை முன்னணி நடிகர்களின் படங்களாக ரிலீஸானது கேப்டன் மில்லர் மற்றும் அயலான் மட்டுமே. இரண்டுமே பெரிய அளவில் வசூல் இல்லாமல் போனது.

இதையும் படிங்க: என்னால அவர் எதிர்காலம் பாதிக்கக் கூடாது.. விஜய் நடிக்க மறுத்த திரைப்படம்..

அதே வேளையில், மலையாள படங்களின் ஆதிக்கமும் அதிகமாகி இருக்கிறது. அதில் வருமானம் கிடைத்தாலும் தமிழ் படங்களை மிஸ் செய்யாத தியேட்டர்கள் பழைய ஹிட் படங்களை வரிசையாக ரீலிஸ் செய்ய திட்டமிட்டது. அந்த வகையில், பாபா, ஆளவந்தான், 3, வாரணம் ஆயிரம் படங்கள் ரிலீஸானது. இதில் 3 மற்றும் வாரணம் ஆயிரம் படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்தது.

ரசிகர்கள் தியேட்டர்களில் ஆடி ஆரவம் செய்தது எல்லாம் வைரல் ஆனது. இந்நிலையில் விஜயின் கில்லி திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற படங்களுக்கு போல இல்லாமல் மிகப்பெரிய வசூலை குவித்தது. கிட்டத்தட்ட 6 கோடிக்கும் அதிகமான வசூல் எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான வெற்றி படமான இந்தியனை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: அமர்க்களம் படத்தில் துவங்கி இப்போது வரை!.. 25 வருட வெள்ளி விழாவை கொண்டாடிய அஜித் – ஷாலினி ஜோடி…

மே மாத இறுதியில் இப்படத்தினை ரிலீஸ் திட்டம் எனக் கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில், ஜூன் மாதம் ரிலீஸாகும் இந்தியன் இரண்டாம் பாகத்துக்கு சரியான புரோமோஷனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் கில்லி படத்தை போல இந்தியனுக்கு கூட்டம் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago