பெரிய சம்பவம் வெயிட்டிங்!. அமெரிக்கால ஆண்டவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்கார் பாருங்க!..

by சிவா |   ( Updated:2025-04-07 02:32:03  )
kamal
X

நடிகர் கமல்ஹாசன் 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். மற்ற நடிகர்களை போல நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் சினிமா தொடர்பான பல தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். அதனால்தான் கதை, வசனம், திரைக்கதை எழுதுவது, படங்களை இயக்குவது, தயாரிப்பது, திரைப்படங்களில் பாடுவது, மேக்கப் பற்றிய விஷயங்கள் என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்.

கமலின் போட்டி நடிகரான ரஜினி இதை எதையுமே செய்யமாட்டார். நடிப்பதோடு அவரின் ஆர்வம் நின்று விடும். ஆனால், உலக விஷயங்களை தேடி தெரிந்துகொள்வார். ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என அவருக்கு தெரியும். அரசியல்வாதிகளையும், அரசியலையும் கூர்ந்து கவனிப்பவர் கமல். பின்னால் நடக்கும் விஷயங்களையும் அவர் முன்பே பேசியிருக்கிறார்.

அன்பே சிவம் படத்தில் ‘தமிழ்நாட்டை சுனாமி அலை தாக்காது என யார் சொன்னா?’ என பேசியிருப்பார். அவர் சொல்லி சில வருடங்களில் தமிழகத்தை சுனாமி தாக்கியது. வைரஸ் மூலம் மக்களை கொல்லும் வேலைகளை உலக நாடுகள் செய்யும் என்பதை தசாவதாரம் படத்தில் காட்டினார். பின்னாடி கொரோனா வைரஸ் தாக்குதலில் மக்கள் கொத்து கொத்தாக இறந்து போனார்கள்.

விஸ்வரூபம் படத்தை சேட்டிலைட் மூலம் ரிலீஸ் செய்ய நினைத்தார். அப்போது தியேட்டர் அதிபர்கள் அதை எதிர்த்தார்கள். ஆனால், இப்போது ஓடிடி வந்துவிட்டது. விக்ரம் படத்தின் ஹிட் கமலை மீண்டும் சினிமாவில் பிஸி ஆக்கியுள்ளது. ஏற்கனவே கல்கி படம் வெளியான நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்தார். இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது எல்லா இடத்திலும் AI தொழில்நுட்பம் வந்துவிட்டது. விஜய் நடித்து வெளியான கோட் படத்திலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை மிகவும் சிறிய வயதாக காட்டியிருந்தனர். இதை புரிந்துகொண்ட கமல் அந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா போனார்.

இந்நிலையில், லாஸ் வேகஸில் சினிமா தொடர்பான ஒரு கண்காட்சி நடந்தது. கமல் அங்கு சென்று பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

Next Story