நாகேஷை கொன்று விட்டால் என்னனு தோன்றியது... பிரபல நடிகர் ஓப்பன் டாக்...!
சினிமாவில் சக நடிகர் மீது பொறாமை வருவதும், அதன் காரணமாக அவர்களை ஏதாவது செய்தால் என்ன எனும் அளவிற்கு கோபம் வருவதும் சாதாரண விஷயம் தான். ஆனால் அதற்காக ஒருவரை கொல்லும் அளவிற்கு கூடவா கோபம் வரும் என்று நினைக்கும் அளவிற்கு பிரபல நடிகர் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் ஒரு முறை கிரேஸி மோகன் நாடக மேடை சிறப்பு விழா ஒன்றில் இயக்குனர் பாலச்சந்தர் உடனான அனுபவம் ஒன்றை பகிர்ந்துக்கொண்டார்.
அதன்படி கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, "கடந்த 1976 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மன்மதலீலை என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் இந்த கதையை இயக்குனர் பாலச்சந்தர் நடிகர் நாகேஷை மனதில் வைத்து எழுதியுள்ளார் போல. இந்த விஷயம் எனக்கு தெரியாது.
ஒருமுறை மன்மதலீலை படத்தின் படப்பிடிப்பின்போது ஏதோ ஒரு காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பின்னர் பரப்பாக இங்கும் அங்கும் ஓட வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் நடித்தபோது ம்ம்ம்ஹூம் நல்லா வரல நாகேஷை மனசுல வச்சு எழுதிட்டேன் என பாலச்சந்தர் மிகவும் சலித்துக்கொண்டார்.
அப்போதெல்லாம் நாகேஷை தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டால் என்ன? என தோன்றியது. அதன் பின்னர் இதையெல்லாம் நாகேஷிடம் கூறினேன். அதற்கு நாகேஷ் பொறுமையாக இரு எல்லாம் மாறும் என்றார். அந்த காலம் மாறியது. ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆனது" என கூறினார் கமல்ஹாசன்