நண்பருக்கு நடந்த சோக நிகழ்வு!.. தன் படத்தில் காட்சியாக வைத்த கமல்.. எந்த படம் தெரியுமா..?

By Hema
Published on: February 13, 2023
---Advertisement---

 

ajith

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டு இன்று முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு எந்த ஒரு பக்கபலமுமின்றி சினிமாவில் தன் தன்னம்பிக்கை கொண்டு கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர் இவர். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் நாளுக்கு நாள் இவரின் ரசிகர் படைகளில் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

kamal

கமல்ஹாசன் எப்போதும் வித்தியாசமாக சிந்தித்து வளர்த்து புதுமையை திரையில் அமைத்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர். இவரின் கற்பனை அளவிற்கு எல்லையே இல்லை . இதில் கமலிற்க்கு என்ன தொடர்பு என்றால், அஜித் முதல் முதலில் ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமாகும் படம் பிரேம புஸ்தகம். பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியனின் நண்பர் இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஆவார். அஜித்தை பாலசுப்ரமணியன் தான் பரிந்துரை செய்துள்ளார். ஏனென்றால் அஜித்தும் எஸ்பிபியின் மகனான எஸ்.பி சரணம் ஒரே பள்ளியில் பயின்ற நண்பர்கள்.

ajith

மற்றொருபுறம் கமலின் இந்திரன் சந்திரன், ஹே ராம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கோலபுடி மாருதி ராவ் என்ற பெரிய தெலுங்கு நடிகர். இவர் கமலின் நெருங்கிய நண்பராவார். இப்படத்திலும் நடித்திருப்பார். இவரின் மகனான கோலபுடி ஸ்ரீனிவாசன் பிரேம புஸ்தகம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சூட்டிங் தொடங்கி 9 நாட்கள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நன்றாக நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது லொகேஷன் பார்ப்பதற்காக பீச் பக்கம் போயிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன். அப்பொழுது ”பெரிய அலை வரும்போது என்னை போட்டோ எடுங்க அதை நான் படத்தின் டைரக்ஷன் டைட்டில் கார்டில் பயன்படுத்திக் கொள்கிறேன்”.

kamal with madhavan

என்று போட்டோவிற்கு போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பெரிய அலை அவரை அடித்துச் சென்றது பின்னர் அவர் பிணமாகத்தான் கிடைக்கப்பெற்றார். தனது நண்பரின் மகனை இழந்த சம்பவம் கமலை பெரிதாக பாதித்துள்ளது. இதை 2003இல் இயக்குனர் சுந்தர். சி யின் இயக்கத்தில் வெளிவந்த ”அன்பே சிவம்” என்ற படத்தில் பயன்படுத்தி இருப்பார். அப்படத்தில் மழையும் புயலும் ஒரு அங்கமாகவே வந்து கொண்டிருக்கும். அதில் ஒரு காட்சியில்” எனது அப்பா கடல் அலையின் முன்பு போட்டோ எடுக்கும் போது ஒரு பெரிய அலை அவரை கொண்டு சென்றது” என்று வருத்தப்பட்டு பேசி இருப்பார்.

Hema

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.