பொதுவாகவே உலகநாயகன் கமல் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசம்…தொழில்நுட்பம்…நேர்த்தி இருக்கும். அந்தவகையில் நாம் பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றில் ஒரு சில உங்கள் பார்வைக்கு…
ஹேராம்
இது ஒரு வரலாற்றுப்படம். இந்தப்படத்தில் சாகேத்ராம் என்று பொதுவான ஒரு மனிதனின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். இவரது பார்வையில் காந்தி கெட்டவராகத் தெரிகிறார்.
கடைசியில் தப்பை உணர்ந்த சாகேத்ராமுக்கு காந்தி நல்லவராகத் தெரிகிறார். காந்தியைப் பலரும் கொல்ல வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் சாகேத்ராம். சாகேத்ராம் எதற்காக காந்தியைக் கொல்ல நினைத்தார்? இறுதியில் கொன்றாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
விருமான்டி
இது ஒரு நான் லீனியர் ஸ்டோரி படம். இந்தப்படத்தில் வரும் ஒலிப்பதிவு எல்லாம் நேரடியாக பதிவு செய்யப்பட்டது. இது ஒரு தூக்குத்தண்டனையை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. ஒரு சம்பவம் நடக்குதுன்னா அதற்கு பல கோணங்களில் பார்வைகள் இருக்கும். இங்கு சரி தப்பு என எதுவும் கிடையாது.
ஒரு சராசரி மனிதனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற போது தனக்கான நியாயத்தை அரிவாள் கொண்டு தேடுகிறான் என்பது படக்காட்சி விவரிக்கிறது. மரண தண்டனை, சாதி வெறி, சிறைக்குற்றங்கள், விவசாயம் என நான்கு விஷயங்களை மையமாகக் கொண்டு படத்தின் கதை சுழன்று வருகிறது.
அன்பேசிவம்
முதலாளித்துவத்தை விரும்புகிற நல்லசிவமும், முதலாளித்துவத்தை எதிர்க்கிற அன்பரசுவும் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்கள் படத்தின் பலம்.
இருவருக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள். நல்லதை செய்பவரே கடவுள். அன்பு தான் கடவுள் என்பதை ஆழமாக வலியுறுத்தி சொல்லப்பட்ட படம்.
தேவர்மகன்
இந்தியாவிலேயே இப்படி ஒரு திரைக்கதையை யாரும் எழுதவில்லை என்று உச்சிமுகர்ந்து பாராட்டப்பட்ட படம். ரெயிலில் இருந்து சந்தோஷமாக ஆடிப்பாடி இறங்கி வரும் சக்திவேல், ஊரில் நடக்குற சண்டைகளால் வருத்தப்படுகிறான்.
இறுதியில் இந்த ஊரையேக் காப்பாற்றி திருத்தி ரொம்பவே எளிமையாக அமைதியாக அதே ரெயிலில் திரும்பிச் செல்கிறான். இதுபோன்ற கிராமியக்கதை அம்சங்களில் மனதை லயிக்கும்படி செய்தார் கமல்ஹாசன்.
மகாநதி
ஒரு மனுஷனுக்கு தன்னுடைய வாழ்நாளில் சந்திக்கக்கூடாத துயரத்தை ரொம்ப ஆழமாக சொல்லியுள்ள படம். இந்தப்படத்தோடக் கதை
கமலின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில உண்மைச்சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாம். இந்தப்படம் கமலின் முக்கியமான திரைப்பட வரிசையில் ஒரு மைல் கல்.
குணா
இந்தப்படத்தை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் நமக்கு ஒவ்வொரு பரிமாணத்தில் கதை ரசிக்க வைக்கும். இது ஒரு தடவை பார்க்கக்கூடிய படமல்ல.
பல தடவை பார்த்தால் தான் நல்லா புரியும். இந்தப்படம் ரசனை உள்ளவர்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு பிரேமையும் ரசித்து ரசித்துப் பார்க்கலாம்.
உன்னைப்போல் ஒருவன்
இந்தப்படத்தைப் பார்க்கும் போது ஒரு சாதாரண மனிதனுக்குள் இவ்வளவு உணர்ச்சிகளா என்று வியக்க வைக்கிறது. படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது. கதையின்படி சென்னைக்காவல் துறை ஆணையருக்கு ஒரு போன் வருகிறது. அது ஒரு மிரட்டல் அழைப்பு.
அது எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பத்குள் காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பேசியவர் ஒரு சாதாரண மனிதர். தனக்கான கோரிக்கையாக 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை கதை விவரிக்கிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…