கமல் முதல் படத்திலே தேசிய விருது வாங்க காரணம் யார் தெரியுமா? இப்படி தான் கிடைத்தது இந்த வாய்ப்பு!

Published on: August 16, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்றால் அதில் கமல் என்று எழுதப்படாத விதி இன்றும் இருக்கத்தான் செய்கிறது. பிறர் செய்ய தவறிய விஷயங்களை அசால்ட்டாக செய்து முடித்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். தன்னுடைய எல்லா படங்களிலுமே ஒரு வித்தியாசத்தினை காட்ட தவறமாட்டார்.

பல வருட இடைவேளைக்கு பின்னர் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவின் வளர்ச்சியினையே ஒரு பங்கு அதிகரித்தது என்று சொல்லும் அளவுக்கு அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 7, இந்தியன் 2 என படுபிஸியாக சுற்றி வருகிறார் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: கடந்த 3 வருடங்களாக தியேட்டர்களை வாழ வைத்த 3 நடிகர்கள்.. 3 படங்கள்!…

அவரின் சுட்டித்தனமான ஆக்‌ஷன்களை பார்த்து விட்டு உனக்கு நடிக்க பிடிக்குமா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். அப்போது சற்றும் யோசிக்காத கமல் முழு சம்மதத்தினையும் தெரிவித்தாராம். அப்போதே அவர் மீது கேமரா லைட்டை போட்டு டெஸ்ட் செய்தவர் தான் மெய்யப்ப செட்டியார். 

இதையும் படிங்க: அந்த சீன்ல இருந்தது சிவகார்த்திகேயன்தான்! என்னப்பா சொல்றீங்க? ‘ஜெய்லர்’ பட முடிச்சை அவிழ்த்த பிரபலம்

களத்தூர் கண்ணம்மாவில் தான் கமல் அறிமுகம் செய்யப்பட்டார். அப்படத்தில் ஜெமினி, சாவித்ரியை விட மிகப்பெரிய பெயர் அவருக்கு கிடைத்தது. முதல் படத்திலேயே அவரின் நடிப்புக்கு தேசிய விருது கூட கிடைத்தது. தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்த புகழ் கமலுக்கு உண்டு.

அதிலும், என்னை பெரிய நடிகர்கள் அவர் படங்களில் நடிக்க வைத்ததன் மூலமே தான் பெரிய நடிகராக ஆனேன் என கமலும் அடிக்கடி சொல்வது உண்டு. அந்த அளவுக்கு அவரின் ஆரம்ப காலத்தில் பல பெரிய நட்சத்திரங்களின் நடித்த பெருமையுமே கமலுக்கு உண்டு.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.